/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரையிறுதிக்கு தகுதி பெற்ற மாணவர்கள் யார், யார்?
/
அரையிறுதிக்கு தகுதி பெற்ற மாணவர்கள் யார், யார்?
ADDED : டிச 18, 2025 05:13 AM

கோவை: 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் எஸ்.என்.எஸ்., கல்விக் குழுமம் இணைந்து நடத்திய 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி-வினா போட்டியில், பங்கேற்ற மாணவர்கள் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.
பி.எஸ்.ஜி.ஜி., கன்யா குருகுலம் மேல்நிலைப்பள்ளி ஹோப் கல்லூரி பகுதியில் செயல்படும் இப்பள்ளியில், நடைபெற்ற தகுதி சுற்றில் பங்கேற்ற 97 மாணவிகளில், 16 பேர் எட்டு அணிகளாகப் பிரிந்து பள்ளி அளவிலான இறுதிசு ற்றில் பங்கேற்றனர். இதில், 'இ' அணியைச் சேர்ந்த சம்ருத்தி மதுலிகா மற்றும் விகாஷினி ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். தலைமையாசிரியை கா ஞ்சனா, இறுதிப்போட்டியில் பங்கேற்ற மாணவி களுக்கு பரிசுகளை வழங்கினார்.
ஸ்ரீ சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செட்டிபாளையம் பகுதியில் உள்ள இப்பள்ளியில் நடந்த தகுதி சுற்றில் பங்கேற்ற, 216 மாணவர்களில், 16 பேர் எட்டு அணிகளாகப் பிரிந்து பள்ளி அளவிலான இறுதிசுற்றில் பங்கேற்றனர்.
இதில், 'எப்' அணியின் பாரதி, ஆகாஷ் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். பள்ளி நிர்வாக அதிகாரி ராம் பிரபா, முதல்வர் புவனேஸ்வரி இறுதி போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
ஆத்ரேயா ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் செட்டிபாளையம் பகுதியில் உள்ள இப்பள்ளியில் நடந்த தகுதி சுற்றில் பங்கேற்ற 50 மாணவர்களில், 16 பேர் எட்டு அணிகளாகப் பிரிந்து பள்ளி அளவிலான இறுதிசுற்றில் பங்கேற்றனர்.
இதில், 'சி' அணியின் முகேஷ், ரோகித் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். பள்ளி முதல்வர் ராம் பிரபா இறுதி போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு, பரிசுகளை வழங்கினார்.

