/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செப்., மாத ஊதியத்துக்கு காத்திருப்பு; பரிதாபத்தில் பகுதிநேர ஆசிரியர்கள்

ADDED : அக் 02, 2024 07:52 AM
கோவை: பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அறிக்கை:
ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில்(எஸ்.எஸ்.ஏ.,) பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள், மத்திய அரசு, 60 சதவீதம், மாநில அரசு, 40 சதவீதம் என்ற அடிப்படையில் நிதி பங்கிடப்பட்டு தமிழகத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த ஊதியத்தை நம்பி கோவையில், 380 பேர் உட்பட மாநிலத்தில், 15 ஆயிரம் பேர் உள்ளனர்.
இந்நிலையில், செப்., மாத ஊதியம் இதுவரை வழங்கப்படாததால், வீட்டு வாடகை, மருத்துவ செலவு உள்ளிட்டவற்றுக்கு பொருளாதார ரீதியாக சிரமப்படுகிறோம். முதல்வர் ஸ்டாலின் நிதியை விடுவித்து ஊதியம் கிடைக்க வழிவகை செய்வதுடன், முன்கூட்டியே சம்பளம் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்துள்ளார்.