/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வித்யோதயா பள்ளியில் வேலு நாச்சியார் நாடகம்
/
வித்யோதயா பள்ளியில் வேலு நாச்சியார் நாடகம்
ADDED : டிச 25, 2025 06:07 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி வித்யோதயா பள்ளியில், இந்திய வரலாற்றின் முதல் பெண் விடுதலை போராளி வீரமங்கை வேலுநாச்சியாரின் வீர வரலாற்றை மையமாக கொண்டு நாடக நிகழ்ச்சி நடந்தது. அதில், 300 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
அரசியல், சமூக போராட்டம், தியாகம், பெண் தலைமையின் மாபெரும் எடுத்துக்காட்டாக விளங்கிய வேலு நாச்சியாரின் வாழ்க்கை பயணம், சிறுவயது, அரசியல் சூழ்ச்சிகள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டன.
உடையாள், குயிலி போன்ற தியாக பெண்களின் அர்ப்பணிப்பு, ைஹதர் அலியுடன் கொண்டு இருந்த நட்பு, சிவகங்கை அரசை மீட்டெடுத்த வீரச்சாதனை குறித்து மேடையில் உயிர்ப்புடன் காட்சிப்படுத்தப்பட்டன. நடனங்களும் காட்சிக்கேற்ப இடம் பெற்றன.
வரலாற்று சத்தியத்தை மையமாக கொண்டு வடிவமைக்கப்பட்ட காட்சிகள், காலத்திற்கேற்ற ஆடைகள், மேடை, அலங்காரம், இசை, ஒளி அமைப்பு மற்றும் மாணவர்களின் உணர்வுப்பூர்வமான நடிப்பு பார்வையாளர்களை கவர்ந்தது.
இந்நாடகம், மாணவர்களுக்கு தேச பற்று, பெண் சக்தி, தைரியம், தன்னம்பிக்கை, வரலாற்றுணர்வு ஆகியவற்றை விதைக்கும் வகையிலும், இன்றைய தலைமுறைக்கு வேலு நாச்சியார் பெருமைகளை நினைவூட்டும் முயற்சியாக இந்த நாடகம் நடத்தப்பட்டதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

