/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண்மை பற்றி விரிவாக அறிய... மாணவர்களை அழைக்கிறது பல்கலை
/
வேளாண்மை பற்றி விரிவாக அறிய... மாணவர்களை அழைக்கிறது பல்கலை
வேளாண்மை பற்றி விரிவாக அறிய... மாணவர்களை அழைக்கிறது பல்கலை
வேளாண்மை பற்றி விரிவாக அறிய... மாணவர்களை அழைக்கிறது பல்கலை
ADDED : மே 04, 2025 12:51 AM
கோவை: பல்வேறு அறிவியல் துறைகளில், புதிய தொழில்நுட்பங்கள், அறிவியல் நடைமுறைகள் குறித்து அறிந்து, கற்றல் அனுபவத்தை விரிவுபடுத்திக் கொள்ள, பள்ளி மாணவர்களுக்கு 26 துறைகளில் கல்விச் சுற்றுலா வாய்ப்பளிக்கிறது, கோவை வேளாண் பல்கலை.
கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை நூற்றாண்டு கடந்த பாரம்பரியம் கொண்டது. இப்பல்கலையைச் சுற்றிப் பார்த்து, பல்வேறு துறைகளைப் பற்றி அறிந்து கொள்ள, பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கிறது, பல்கலை நிர்வாகம்.
பல்கலையில் ஏராளமான துறைகள் இருப்பினும், பள்ளி மாணவர்கள் கல்விப்பயணம் மேற்கொள்ள, 26 துறைகளில் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
இவற்றில் ஏதாவது 5 துறைகளை, ஒரு பள்ளி தேர்வு செய்யலாம். குறைந்தபட்ச கட்டணம் உண்டு. பூச்சி அருங்காட்சியகம், தாவரவியல் பூங்காவுக்கு தனியே கட்டணம் செலுத்த வேண்டும்.
இவ்வகை கல்விப் பயணம், மாணவர்களின் கற்றல் அனுபவத்தை விரிவடையச் செய்கிறது. பாடப்புத்தகங்களில் மட்டுமே, அறிவியல் தொழில்நுட்பங்கள் பற்றிப் பயிலும் மாணவர்கள், அவற்றை நேரில் கண்டு, நடைமுறைப்படுத்தப்படுவதை, அறிந்து கொள்ளும்போது எளிதாக மனதில் பதியும்.
தங்களின் எதிர்காலத் துறையை, தேர்வு செய்து கொள்ளவும் இது வாய்ப்பாக இருக்கும்.கோடை விடுமுறை துவங்கியுள்ள நிலையில், சில பள்ளிகள் கோடை சிறப்பு வகுப்புகளை நடத்துகின்றன.
இதுபோன்ற சமயங்களில், பல்கலைக்குள் கல்விப் பயணம் என்பது, மாணவர்களுக்கும் சிறந்த அனுபவமாக மட்டுமல்லாது, பயனுள்ள அனுபவமாகவும் இருக்கும்.

