/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நால்ரோட்டில் குறையாத நெரிசல்; விபத்து அதிகரிப்பால் கவலை
/
நால்ரோட்டில் குறையாத நெரிசல்; விபத்து அதிகரிப்பால் கவலை
நால்ரோட்டில் குறையாத நெரிசல்; விபத்து அதிகரிப்பால் கவலை
நால்ரோட்டில் குறையாத நெரிசல்; விபத்து அதிகரிப்பால் கவலை
ADDED : ஏப் 09, 2025 12:12 AM
குடிமங்கலம்; நால்ரோடு சந்திப்பில், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி, பல ஆண்டுகளாக இழுபறியாக இருப்பதால், பெதப்பம்பட்டியில் விபத்துகள் அதிகரித்து வருகிறது.
பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலை மற்றும் உடுமலை-செஞ்சேரிமலை மாவட்ட முக்கிய ரோடு சந்திக்கும், நால்ரோடு சந்திப்பு பெதப்பம்பட்டியில் உள்ளது.
இங்கு, அரசு மேல்நிலைப்பள்ளி, வட்டார வேளாண் விரிவாக்க மையம் உட்பட அரசு அலுவலகங்கள், நுாற்பாலைகள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
பொள்ளாச்சியிலிருந்து தாராபுரம், பெதப்பம்பட்டி மற்றும் உடுமலையிலிருந்து செஞ்சேரிமலை உட்பட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் நால்ரோடு பகுதியில் நிறுத்தப்படுகின்றன.
அப்பகுதியில், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில், தற்காலிக ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன.
மேலும், ஒன்றிய அலுவலகத்தில் இருந்து, நால்ரோடு வரை நெடுஞ்சாலைத்துறையின் அளவீட்டு கல் இருப்பதே தெரியாத அளவுக்கு, தற்காலிக ஆக்கிரமிப்புகள் உள்ளன.
அங்கு சென்டர் மீடியனும் வைக்கப்பட்டுள்ளதால், குறுகலான இடத்தில், வாகனங்கள் பயணிக்க வேண்டியுள்ளது. அதே போல், பஸ்கள் திரும்பும் இடத்திலும், போக்குவரத்துக்கு இடையூறாக, அமைக்கப்பட்ட, உயர் மின் கோபுர விளக்கு மாற்றியமைக்கப்படாமல் உள்ளது.
தாராபுரம் பஸ்கள் மற்றும் உடுமலையிலிருந்து கிராமங்களுக்கு செல்லும் பஸ்களும் நிறுத்துவதற்கு இடமில்லை.
எனவே, நெரிசல் சிக்கி தவிக்கும் பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில், ஆக்கிரமிப்புகளை அகற்ற, நெடுஞ்சாலைத்துறைக்கு தொடர் கோரிக்கை விடப்பட்டு வருகிறது. ஆனால், அத்துறையினர் நடவடிக்கை பல ஆண்டுகளாக இழுபறியாகவே உள்ளது.
இதனால், காலை, மாலை நேரங்களில், நெரிசல் அதிகரித்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

