தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வெவ்வேறு சம்பவங்களில் இருவர் தற்கொலை

வெவ்வேறு சம்பவங்களில் இருவர் தற்கொலை

வெவ்வேறு சம்பவங்களில் இருவர் தற்கொலை


ADDED : ஏப் 08, 2025 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2025 05:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை; தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர்கள் கருணேஸ்வரன், 26, மலர்விழி, 26. இருவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டரை வயதில் குழந்தை உள்ளது.

சொந்த ஊரில் நடந்தி வந்த இ-சேவை மையத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், கருணேஸ்வரன் கடன் வாங்கினார்.

தொடர்ந்து மனைவியுடன் கருணேஸ்வரன் கோவை துடியலூர் மருதப்பன் நகரில் தங்கி உணவு விநியோகம் செய்யும் வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் துடியலூர் கதிர்நாயக்கன்பாளையம் சரவணன் நகரில் நண்பரின் அறையில் கருணேஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். துடியலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

* கோவை, ஆவாரம்பாளையம் இளங்கோ மெயின் ரோட்டை சேர்ந்த தம்பதி, சரண்ராஜ், வினோதினி. காதலித்து திருமணம் செய்தவர்கள். குழந்தை இல்லை.

டிரைவரான சரண்ராஜூக்கும், உறவினருக்கும் வாகனம் நிறுத்துவது தொடர்பாக பிரச்னை இருந்தது. நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது வினோதினி அவர்களை சமரசம் செய்ய முயன்றார்.

அதன் பின் சரண்ராஜ், மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றார். பின் வெளியில் சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்த போது, வினோதினி தூக்கிட்டு இறந்த நிலையில் காணப்பட்டார்.

இதுகுறித்து சென்னையில் உள்ள அவரது தாய் பட்டமாளுக்கு, சரண்ராஜ் தகவல் தெரிவித்தார். பட்டம்மாள் அளித்த புகாரின்படி, பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us