தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மரக்கன்றுகள் நடும் பணி

மரக்கன்றுகள் நடும் பணி

மரக்கன்றுகள் நடும் பணி


ADDED : மே 26, 2025 11:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 26, 2025 11:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவில்பாளையம்; கோவில்பாளையம் அருகே, அக்ரஹார சாமக்குளத்தில் 160 ஏக்கர் பரப்பளவு உள்ள குளம் உள்ளது. இந்த குளத்தில் தன்னார்வலர்கள் மற்றும் கவுசிகா நீர்க் கரங்கள் அமைப்பு சார்பில் ஒவ்வொரு வாரமும் குளம் சீரமைக்கும் பணி நடைபெறுகிறது.

நேற்று முன்தினம் மரக்கன்றுகள் நடுதல், பராமரித்தல், களை எடுத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்தன. இதில் பல்வேறு ரகங்களைச் சேர்ந்த 100 மரக்கன்றுகள் நடப்பட்டன.குப்பைகள் அகற்றப்பட்டன. ஏற்கனவே நடப்பட்ட 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளுக்கு நீர் பாய்ச்சப்பட்டது.

இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறுகையில், 'ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று, காலை குளம் சீரமைப்பு பணி நடக்கிறது. ஆர்வம் உள்ளோர் களப்பணிக்கு வரலாம். நிதி உதவி செய்யலாம்.

மேலும் விவரங்களுக்கு 9363226237 என்னும் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்,' என தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us