/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உதவி பேராசிரியர் தேர்வு எழுதிய திருநங்கை
/
உதவி பேராசிரியர் தேர்வு எழுதிய திருநங்கை
ADDED : டிச 28, 2025 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : மாநிலம் முழுவதும் நேற்று உதவி பேராசிரியருக்
கான டி.ஆர்.பி. தேர்வு நடந்தது. ஒண்டிப்புதுார் பகுதியிலுள்ள தேர்வு மையத்தில், வெள்ளக்கிணர், ஹட்கோ காலனியை சேர்ந்த திருநங்கை பத்மினி பிரகாஷ், தமிழ் தேர்வை எழுதினார்.
தேர்வு குறித்து இவர் கூறுகையில், 'தேர்வு மிக சிறப்பாக இருந்தது. தமிழ்நாடு அரசு மூன்றாம் பாலினத்தவரான திருநங்கையரையும் எழுத வைத்ததற்கு மிக்க நன்றி. தமிழ் பேராசிரியராக இருந்துகொண்டு பாலின சமத்துவத்தையும், சமூக நீதியையும் நிலை நாட்டுவேன் என்ப
தில் உறுதியாக இருக்கிறேன்,' என்றார்.

