/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விபத்தில் சிக்கியது சுற்றுலா வேன் உயிர் தப்பிய சுற்றுலாபயணியர்
/
விபத்தில் சிக்கியது சுற்றுலா வேன் உயிர் தப்பிய சுற்றுலாபயணியர்
விபத்தில் சிக்கியது சுற்றுலா வேன் உயிர் தப்பிய சுற்றுலாபயணியர்
விபத்தில் சிக்கியது சுற்றுலா வேன் உயிர் தப்பிய சுற்றுலாபயணியர்
ADDED : டிச 29, 2025 05:39 AM

வால்பாறை: வால்பாறை அருகே, விபத்தில் சிக்கிய சுற்றுலாபயணியர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுலா தலமாக இருப்பதால், பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணியர் வருகின்றனர். தற்போது,தொடர் விடுமுறையால் வால்பாறையை சுற்றி பார்க்க சுற்றுலாபயணியர் அதிக அளவில் திரண்டுள்ளனர்.
இந்நிலையில், காங்கேயத்திலிருந்து வால்பாறைக்கு சுற்றுலாவந்த ஐந்து பேர் நேற்று காலை, மீண்டும் காங்கேயத்திற்கு காரில் சென்றனர்.
அப்போது ஆழியாறு அருகே உள்ள மலைப்பாதையில், கார் திடீரென பிரேக் பிடிக்காமல் சுவற்றின் மீது மோதியது. டிரைவர் செந்தில் உள்ளிட்ட ஐந்து பேரும் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.