/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எம்.எல்.எப்., தொழிற்சங்க சொத்துக்கள்: தி.மு.க., - ம.தி.மு.க.,வுக்கு சொந்தமல்ல சொல்கிறார் திருப்பூர் துரைசாமி

ADDED : அக் 16, 2024 06:43 AM

கோவை : ''எம்.எல்.எப்., தொழிற்சங்கத்தின் பெயரில் வாங்கப்பட்ட சொத்துக்கள் தி.மு.க.,வுக்கோ, ம.தி.மு.க.,வுக்கோ சொந்தமானது அல்ல,'' என, அதன் பொது செயலாளரான, முன்னாள் எம்.எல்.ஏ., திருப்பூர் துரைசாமி கூறினார்.
கோயமுத்துார் மற்றும் பெரியார் மாவட்ட திராவிடப் பஞ்சாலை தொழிலாளர் முன்னேற்ற சங்க (எம்.எல்.எப்.,) பொது செயலாளரான, முன்னாள் எம்.எல்.ஏ., திருப்பூர் துரைசாமி, நிருபர்களிடம் கூறியதாவது:
தொழிற்சங்கம் பெயரில் வாங்கப்பட்ட சொத்து,கோயமுத்துார், பெரியார் மாவட்ட திராவிடப் பஞ்சாலைகள் முன்னேற்ற சங்கத்துக்கு சொந்தமானது என, நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சொத்துக்களுக்கு, தி.மு.க.,வோ, ம.தி.மு.க.,வோ உரிமை கொண்டாட முடியாது.
தொழிற்சங்கத்தினர் பொதுக்குழு உறுப்பினர்கள் கூடி, என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ, அதற்கு கட்டுப்பட வேண்டும். சங்க சொத்துக்களை தனிப்பட்ட நபர் விற்க முடியாது.
சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர் கூட்டத்தில் முடிவெடுத்துதான் விற்க முடியுமே தவிர, தனி நபராக விற்க முடியாது.
எந்த சொத்தை விற்பதாக இருந்தாலும், வாங்குவதாக இருந்தாலும் சங்க பொது செயலாளரும், பொருளாளரும் கையெழுத்திட வேண்டும்.
தனிப்பட்ட துரைசாமி, சொத்துக்களை விற்பது முடியாத காரியம். பார்த்தசாரதி தி.மு.க.,வில் எந்த பொறுப்பிலும் இல்லை. தலைவர், செயலாளர், பொதுக்குழு, செயற்குழு என எந்த பதவியும் வகிக்கவில்லை.
எம்.எல்.எப்., தொழிற்சங்கத்துக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தி.மு.க., பொது செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தொழிற்சங்க நிர்வாகிகள் பட்டியலில், பார்த்தசாரதி பெயர் இல்லை. அவருக்கு ஏற்பட்டுள்ள பலவீனத்தால், தவறான பிரசாரத்தை மேற்கொள்கிறார். அவர் மீதான திருட்டு வழக்கு ஜே.எம்., 2 கோர்ட்டில் விசாரணையில் இருக்கிறது; அதனால், உளறிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு, அவர் கூறினார்.