/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பஸ் நடத்துனரை தாக்கிய மூவருக்கு ஓராண்டு சிறை
/
அரசு பஸ் நடத்துனரை தாக்கிய மூவருக்கு ஓராண்டு சிறை
ADDED : நவ 29, 2024 12:30 AM
கோவை; கோவை, மரக்கடையிலிருந்து, ஐந்துமுக்கு வழியாக, 2017ல்,அரசு பஸ் சென்றது. அப்போது, அந்த வழியாக ஆட்டோவில் வந்த, கோவை என்.எச்.ரோட்டை சேர்ந்த முகமது ரசூல், 28, விஜய், 29, கோட்டைமேடு, ஈஸவரன்கோவிலை சேர்ந்த ரோஷன் பரீக், 29, ஆகியோர் பஸ்சை முந்தி செல்ல முயன்றனர்.
டிரைவர் வழிவிட மறுப்பதாக கூறி பஸ்சை மறித்து, நடத்துனர் சதீஷ்குமாரிடம் தகராறு செய்து, அடித்து உதைத்தனர். வெரைட்டிஹால் ரோடு போலீசார் விசாரித்து, மூவரையும் கைது செய்து, கோவை ஜே.எம்:4, கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த மாஜிஸ்திரேட் சுஜித், குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கும், தலா ஓராண்டு சிறை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

