/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேரளாவில் ரூ.3.24 கோடி கொள்ளை: திருவாரூர் பா.ஜ., பிரமுகருக்கு 'காப்பு'

ADDED : ஜூலை 24, 2025 01:27 PM
திருவாரூர்: கேரளா மாநிலத்தில், கடந்த மாதம், 3.24 கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில், திருவாரூர் பா.ஜ., பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
கேரளா மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில், கும்பல் ஒன்றால் கடந்த மாதம், கன்டெய்னர் லாரியில் இருந்து, 3.24 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரித்த கேரள போலீசார், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இருவரை கைது செய்து, திருவாரூர் பகுதியை சேர்ந்தவர்களை தேடி வந்தனர்.
அந்நிலையில், திருவாரூரைச் சேர்ந்த, துரைஅரசன் என்பவர், கேரள மாநிலம், கரியகுளக்கரை போலீஸ் ஸ்டேஷனில் ஆஜர் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இவர், பா.ஜ., கட்சியில், ஓ.பி.சி., அணி மாநில செயற்குழு உறுப்பினர்.
மேலும், திருவாரூர் வந்த கேரள போலீசார், இக்கொள்ளையில் தொடர்பு இருப்பதாக, திருவாரூர் அருகில், சேந்தமங்கலத்தைச் சேர்ந்த ஸ்ரீராம், 29, என்பவரை நேற்று கைது செய்தனர். அவரது காரையும் பறிமுதல் செய்தனர். இவர், பா.ஜ., இளைஞர் அணி, திருவாரூர் நகர முன்னாள் பொதுச்செயலர் ஆவார்.