/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
/
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED : மார் 21, 2024 07:06 AM

தொண்டாமுத்தூர் : பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழாவையொட்டி, திருக்கல்யாண உற்சவம் வெகுவிமரிசையாக நடந்தது.
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். இந்தாண்டு, பங்குனி உத்திர தேர்த்திருவிழா, கடந்த, 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
நாள்தோறும் காலையும், மாலையும், யாகசாலை பூஜை மற்றும் சுவாமி புறப்பாடு நடந்தது. நேற்று, இரவு, பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, வெள்ளையானை சேவை, அதிமூர்க்கம்மன் தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். தேர்த்திருவிழாவான இன்று, மாலை, 4:30 மணிக்கு, கோவில் உட்பிரகாரத்தில், தேர் போல அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் தேர் வடம் பிடித்தல் நடக்கிறது.

