/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மொபைல் பறித்து விட்டு தப்பிய திருடன் கால் முறிவு
/
மொபைல் பறித்து விட்டு தப்பிய திருடன் கால் முறிவு
ADDED : செப் 26, 2024 11:43 PM

அன்னுார், : ஆட்டோ டிரைவரிடம் மொபைலை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய திருடன் கீழே விழுந்ததில் கால் முறிந்தது.
கோவில்பாளையம் அருகே கொண்டையம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெர்மன் ராகேஷ், 24. இவர் மீது கற்பழிப்பு, அடிதடி, உள்ளிட்ட எட்டு வழக்குகள் உள்ளன. நேற்று காலை ராகேஷ், தனது நண்பர்கள் நந்தகுமார், 21, சந்தோஷ், 25, ராகுல், 19 ஆகியோருடன் அன்னுாரில் பூபதி என்பவரின் ஆட்டோவில் கோவில்பாளையம் சென்றனர்.
அப்போது நான்கு பேரும் சேர்ந்து பூபதியின் மொபைல் மற்றும் 2,000 ரூபாயை பறித்துக் கொண்டு தப்ப முயன்றனர். உடனே பூபதி சத்தம் போட்டார். சத்தத்தை கேட்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் திரண்டனர். நான்கு பேரும் தப்பி ஓடினர். இதில் ராகேஷ் கீழே விழுந்ததில் அவருடைய வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
ஊர் பொதுமக்கள் ராகேசை அன்னுார் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீசார் ராகேஷ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். சந்தோஷ் என்பவரும் நேற்று இரவு பிடிபட்டார். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

