/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளலுார் பஸ் ஸ்டாண்ட் பணிகளை மீண்டும் துவங்க கோருகிறது மீட்பு குழு
/
வெள்ளலுார் பஸ் ஸ்டாண்ட் பணிகளை மீண்டும் துவங்க கோருகிறது மீட்பு குழு
வெள்ளலுார் பஸ் ஸ்டாண்ட் பணிகளை மீண்டும் துவங்க கோருகிறது மீட்பு குழு
வெள்ளலுார் பஸ் ஸ்டாண்ட் பணிகளை மீண்டும் துவங்க கோருகிறது மீட்பு குழு
ADDED : பிப் 14, 2024 01:52 AM
கோவை;வெள்ளலுாரில் ஒருங்கிணைந்த வெள்ளலுார் பஸ் ஸ்டாண்ட் பணிகளை மீண்டும் துவங்கி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர, தமிழக அரசை வலியுறுத்துமாறு அ.தி.மு.க.,விடம் மீட்பு குழு முறையிட்டுள்ளது.
கோவையின் முக்கிய அடையாளமாகவும், பெயர் சொல்லும் திட்டமாகவும் கடந்த, 2020ம் ஆண்டு வெள்ளலுாரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி துவங்கப்பட்டது.
ரூ.168 கோடி மதிப்பீட்டிலான இப்பணிகளில், 50 சதவீதத்துக்கும் அதிகமான பணிகள் நிறைவடைந்த நிலையில், 2022ம் ஆண்டு பிப்., மாதம் பணிகள் திடீரென நிறுத்தப்பட்டன.
நகரில் போக்குவரத்து நெரிசல், தாமதம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு தரும், பயனுள்ள இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்தும் விதமாக, வெள்ளலுார் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் மீட்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இக்குழு, மத்திய, மாநில அரசுகளிடம் மனு அளித்து பணிகளை மீண்டும் துவங்க வலியுறுத்தி வருகிறது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் பல்வேறு கட்சி நிர்வாகிகளையும்சந்தித்து, பஸ் ஸ்டாண்ட் தொடர்பாக முறையிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிடம், வெள்ளலுார் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் மீட்பு குழு(கட்சி சார்பற்றது) ஒருங்கிணைப்பாளர்கள் மோகன், ஆனந்தகுமார் உள்ளிட்டோர் பணிகளை மீண்டும் துவங்க, தமிழக அரசை வலியுறுத்துமாறு மனு அளித்துள்ளனர்.

