/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டோர குப்பையால் பொதுமக்கள் அதிருப்தி
/
ரோட்டோர குப்பையால் பொதுமக்கள் அதிருப்தி
ADDED : பிப் 07, 2025 08:57 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு மற்றும் வடசித்தூர் பகுதியில் இருந்து, மெட்டுவாவி வழியாக நாள்தோறும், விவசாயிகள், மாணவர்கள் என ஏராளமானோர் பயணித்து வருகின்றனர். இதில், வடசித்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், குடியிருப்பு பகுதி அருகே ரோட்டின் ஓரத்தில் அதிகளவு குப்பை குவிக்கப்பட்டுள்ளது.
வாரம் ஒரு முறை இங்கிருந்து குப்பை அகற்றம் செய்யப்படுகிறது. மற்ற நாட்களில் இங்கு குப்பை குவிக்கப்படுவதால், இந்த ரோட்டின் வழியாக வாகனங்களில் செல்லும் போது, காற்றுக்கு குப்பை பறந்து விழுகிறது. இதனால், வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.
இது மட்டுமின்றி, மழை காலத்தில் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, ஊராட்சி நிர்வாகம் சார்பில், மக்களின் நலன் கருதி ரோட்டோரத்தில் குப்பை கொட்டுவதை தவிர்க்க, குப்பை தொட்டி அமைக்கவோ அல்லது குப்பை கொட்ட மாற்று இடம் தேர்வு செய்யவோ நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

