/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் நீக்க உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை... 1.50 லட்சம்!; இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள் பெயர் இருக்காது

ADDED : நவ 30, 2025 05:11 AM

கோவை: கோவை மாவட்டத்தில் இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், வீடு தேடிச் சென்றபோது இல்லாதவர்கள் என்ற அடிப்படையில், 1.50 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளன. டிச., 9ல் வெளியிடப்படும் வரைவு பட்டியலில் இடம் பெறாது.
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில், 32.25 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் இருக்கின்றன. கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்து திரும்பப் பெற உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்று (30ம் தேதி) காலை 10 முதல் மாலை 6 மணி வரை, அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் அவை செயல்படும். 2002/ 2005ல் எந்த தொகுதியில் ஓட்டுரிமை இருந்தது என்கிற விபரம் தெரியாவிட்டாலும், மற்ற தகவல்களை மட்டும் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். துாய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று, படிவங்களை திரும்ப பெற்று வருகின்றனர். www.voters.eci.gov.in என்ற இணைய தள முகவரி வாயிலாகவும் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.
இதுவரை திரும்ப பெற்ற படிவங்களின்படி, கோவை மாவட்டத்தில் காலமான 74 ஆயிரத்து 253 பேரின் பெயர்கள் பட்டியலில் இருப்பது தெரியவந்துள்ளது.
வீட்டில் இல்லாதவர்கள், முகவரி மாறி சென்றவர்கள், இரட்டை ஓட்டுரிமை பெற்றிருந்தவர்கள் என, ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 850 பெயர்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவர்களது பெயர், பட்டியலில் இருந்து நீக்கப்படும். டிச. 9ல் வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாது.
'படிவத்தை பூர்த்தி செய்ய தெரியாதவர்கள், உதவி மையத்துக்கு வந்தால் அதிகாரியே எழுதிக் கொடுப்பார்' என்று தேர்தல் அலுவலர்கள் கூறினர்.