/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை நகரில் 'ரிசர்வ் சைட்' ஆக்கிரமிப்பு எக்கச்சக்கம்: மாநகராட்சி தனி குழு அமைத்து அகற்ற வேண்டும்
/
கோவை நகரில் 'ரிசர்வ் சைட்' ஆக்கிரமிப்பு எக்கச்சக்கம்: மாநகராட்சி தனி குழு அமைத்து அகற்ற வேண்டும்
கோவை நகரில் 'ரிசர்வ் சைட்' ஆக்கிரமிப்பு எக்கச்சக்கம்: மாநகராட்சி தனி குழு அமைத்து அகற்ற வேண்டும்
கோவை நகரில் 'ரிசர்வ் சைட்' ஆக்கிரமிப்பு எக்கச்சக்கம்: மாநகராட்சி தனி குழு அமைத்து அகற்ற வேண்டும்
ADDED : ஜன 16, 2024 11:33 PM
-நமது நிருபர்-
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளிலும், 2145 க்கும் அதிகமான பொது ஒதுக்கீட்டு இடங்கள் (ரிசர்வ் சைட்) இருப்பதாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
பட்டியலில்இருப்பவை, இல்லாதவை என 250க்கும் மேற்பட்ட ரிசர்வ் சைட்கள் தொடர்பான வழக்குகள் நடந்து வருகின்றன.
பல ஆண்டுகளாக நடந்து வரும் வழக்குகளில், மிகக்குறைவான வழக்குகளில் தான் தீர்ப்பு கிடைத்துள்ளது.
சமீபத்தில், கிழக்கு மண்டலத்திலுள்ள சிங்காநல்லுார் கிருஷ்ணா காலனி, 3வது கிராஸ் தெருவில் 30 அடி ரோடு மற்றும் பூங்காவுக்கான ரிசர்வ் சைட்டை ஆக்கிரமித்து, இரண்டு மாடிகளில் வீடு கட்டப்பட்டு வந்தது.
அது தொடர்பான வழக்கில், கட்டடம் கட்டியவரின் மேல் முறையீட்டு மனுவை கோர்ட் தள்ளுபடி செய்தது.
கோர்ட் உத்தரவின்படி, அக்கட்டடத்தை மாநகராட்சி நிர்வாகம் இடித்து அகற்றியது. அந்த இடத்தில் தற்போது 30 அடி ரோடு போடப்பட்டுள்ளது.
இது போல், கோவை நகரில் மீட்க வேண்டிய ரோடு, பூங்கா இடங்கள் நிறையவுள்ளன.
லே அவுட்களில் வரைபடங்களில் ரோடாகக் குறிப்பிடப்பட்டு, மனையிடங்கள் விற்ற பின்பு, பல லே அவுட்களில் ரோடு மற்றும் பூங்கா இடங்கள், போலி ஆவணங்கள் தயாரித்து விற்கப்பட்டுள்ளன.
சில பகுதிகளில், திருத்தப்பட்ட வரைபடம் சமர்ப்பித்து, அரசாணை வாங்கியும் மனையிடங்களாக மாற்றப்பட்டுள்ளன.
பழைய லே அவுட்களில், ரோடுகளின் நடுவே முதலில் ஷெட்கள் போடப்படுகின்றன.
மாநகராட்சி அதிகாரிகள், குடியிருப்புவாசிகள், கண்டு கொள்ளாதபட்சத்தில், அந்த இடத்தில் கட்டடம் கட்டி, நிரந்தரமாக ஆக்கிரமித்து விடுகின்றனர்.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினால், பல இணைப்புச் சாலைகள் கிடைக்கும். முக்கிய ரோடுகளில் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது.
மாநகராட்சி நிர்வாகம் தனிக்குழு அமைத்து, இந்த இடங்களை மீட்டு ரோடாக மாற்றவேண்டியது காலத்தின் கட்டாயம்.

