/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவி மீது மோதிய அரசு பஸ் இழப்பீடு தொகை தராததால் ஜப்தி
/
மாணவி மீது மோதிய அரசு பஸ் இழப்பீடு தொகை தராததால் ஜப்தி
மாணவி மீது மோதிய அரசு பஸ் இழப்பீடு தொகை தராததால் ஜப்தி
மாணவி மீது மோதிய அரசு பஸ் இழப்பீடு தொகை தராததால் ஜப்தி
ADDED : பிப் 07, 2024 01:35 AM

கோவை:விபத்தில் சிக்கிய மாணவிக்கு இழப்பீடு தராததால், அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
பல்லடம் அருகேயுள்ள காளிவேலம்பாளையத்தை சேர்ந்தவர் நிவேதா,24. பீளமேடு, தனியார் கல்லுாரியில் படித்த போது, 2018, ஜூன் 18ல், ஹோப் காலேஜ் பஸ் ஸ்டாப்பில் நடந்து சென்றார். அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதியதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர்பிழைத்தார்.
இழப்பீடு கோரி, கோவை எம்.சி.ஓ.பி., சிறப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த கோர்ட், 7.54 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, அரசு போக்குவரத்து கழகத்துக்கு, 2022 ஜூலையில் உத்தரவிட்டது.
கோர்ட் உத்தரவுக்கு பிறகும், இழப்பீடு வழங்க தவறியதால், வட்டியுடன் சேர்த்து 10.12 லட்சம் ரூபாயாக அபராதம் அதிகரித்தது.
இத்தொகையினை வழங்க கோரி, நிவேதாவின் வக்கீல் ராதாகிருஷ்ணன், அதேகோர்ட்டில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். அதன்படி, கோவை - சென்னை செல்லும் அரசு விரைவு பஸ் நேற்று ஜப்தி செய்யப்பட்டு, கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.

