/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொட்டல்காடாக உருமாறிய பஸ் ஸ்டாண்ட் பயணியர் நிலையோ பரிதாபம்
/
பொட்டல்காடாக உருமாறிய பஸ் ஸ்டாண்ட் பயணியர் நிலையோ பரிதாபம்
பொட்டல்காடாக உருமாறிய பஸ் ஸ்டாண்ட் பயணியர் நிலையோ பரிதாபம்
பொட்டல்காடாக உருமாறிய பஸ் ஸ்டாண்ட் பயணியர் நிலையோ பரிதாபம்
ADDED : அக் 21, 2024 06:41 AM

பொள்ளாச்சி: பொட்டல் காடு போல, பழைய பஸ் ஸ்டாண்ட் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், மக்கள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் கால் கடுக்க நின்று, பஸ்சுக்காக காத்திருக்கின்றனர்.
பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, திருப்பூர், கோவை, பழநி மற்றும் நெகமம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லக் கூடிய இடமாக உள்ளது.
ஆனால், பஸ் ஸ்டாண்டில் எந்தவொரு கட்டமைப்பு வசதியும் இல்லாததால், மக்கள் பாதிக்கின்றனர். பொள்ளாச்சி - கோவை ரோட்டில், உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஏழு கோடி ரூபாய் செலவில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்படும் நிலையில், பழைய பஸ் ஸ்டாண்டில் சீரமைப்பு பணிகள், கிடப்பில் போடப்பட்டுள்ளது.
மாறாக, திருப்பூர், தாராபுரம் வழித்தடங்கள் நோக்கிய பஸ் நிறுத்துமிடத்தில், நிழற்கூரையும் இடித்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இருக்கை வசதி, குடிநீர் வசதி இல்லாததால், மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மழை மற்றும் வெயிலின் போது, பஸ்சுக்காக காத்திருக்கும் மக்கள், ஒதுங்க இடமில்லாமல், பரிதவிக்கின்றனர்.
மக்கள் கூறியதாவது:
புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டி முடிக்கும் வரை, பழைய பஸ் ஸ்டாண்டில் சீரமைப்பு பணியை மேற்கொண்டிருக்க வேண்டும். அதைத்தவிர்த்து, பொட்டல்காடு போல, பஸ் ஸ்டாண்ட் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மழையில் நனைந்தும், சுட்டெரிக்கும் வெயிலில் காய்ந்தும் கால் கடுக்க நின்று, பஸ்சுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. வெயில் காலத்தில் தாகத்தால் சிரமப்படும் பயணிகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
வெளியூர்களுக்குச் செல்லும் பஸ்களின் நேரம் பார்க்க கால அட்டவணை இருப்பதில்லை. எந்த நேரத்தில் எந்த பஸ்கள் எங்கு செல்லும் என்கிற விபரங்கள் தெரியாமல் பயணியர் பல மணி நேரம் காத்திருக்கின்றனர்.
இரவு நேரங்களில் போதிய மின்விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்கிறது. அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகளின் அலட்சியப்போக்கு, திட்டமிடல் இல்லாமை போன்ற காரணங்களால், மக்களே பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

