/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ேஹாப்ஸ் 11 அணிக்கு சாம்பியன்ஷிப்! குடியிருப்புவாசிகளை ஒன்றிணைத்ததாக வீரர்கள் மகிழ்ச்சி
/
ேஹாப்ஸ் 11 அணிக்கு சாம்பியன்ஷிப்! குடியிருப்புவாசிகளை ஒன்றிணைத்ததாக வீரர்கள் மகிழ்ச்சி
ேஹாப்ஸ் 11 அணிக்கு சாம்பியன்ஷிப்! குடியிருப்புவாசிகளை ஒன்றிணைத்ததாக வீரர்கள் மகிழ்ச்சி
ேஹாப்ஸ் 11 அணிக்கு சாம்பியன்ஷிப்! குடியிருப்புவாசிகளை ஒன்றிணைத்ததாக வீரர்கள் மகிழ்ச்சி
ADDED : அக் 03, 2024 12:12 AM

கோவை : 'தினமலர்' நாளிதழ் சார்பில், நடந்து முடிந்த 'அபார்ட்மென்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்' போட்டி, திறமையை மட்டும் ஊக்குவிக்காமல், அடுக்குமாடி குடியிருப்புவாசிகளை ஒன்றிணைக்கும் விதத்திலும் இருந்ததாக, வீரர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.
'தினமலர்' நாளிதழ் சார்பில் 'அபார்ட்மென்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்-2024' போட்டி, கடந்த செப்., 22ம் தேதி துவங்கியது. 'பெடரேஷன் ஆப் கோயம்புத்துார் அபார்ட்மென்ட் அசோசியேஷன்ஸ்' இணைந்து நடத்திய இப்போட்டியில் மொத்தம், 16 அணிகள் பங்கேற்றன.
கடந்த, 22, 29 ஆகிய தேதிகளில் சி.ஐ.டி., இந்துஸ்தான், என்.ஜி.பி., கல்லுாரி மைதானங்களில் போட்டிகள் நடந்தன.
நேற்று மோதிய அணிகள்
காலிறுதி போட்டிகளை தொடர்ந்து நேற்று, என்.ஜி.பி., கல்லுாரி மைதானத்தில் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் அரையிறுதியில், சரவணம்பட்டியில் உள்ள செந்தில் கோல்டன் கேட் அணியும், நேரு நகர், ரெயின்டிராப் சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.
'டாஸ்' வென்ற ரெயின் டிராப் அணி, முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து, பேட்டிங் செய்த செந்தில் கோல்டன் கேட் அணியினர், 10 ஓவரில், 2 விக்கெட் இழப்புக்கு, 121 ரன்கள் குவித்தனர். அதிகபட்சமாக, அணி வீரர் விஜய் ஆனந்த், 50 ரன்களும், விஷ்ணு, 46 ரன்களும் எடுத்தனர்.
தொடர்ந்து, 122 ரன்கள் இலக்குடன் களம் இறங்கிய ரெயின்டிராப் சூப்பர் கிங்ஸ் அணியினர், 10 ஓவர்களில், 6 விக்கெட்களை இழந்து, 82 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தனர்.
ஆட்டநாயகன் யார், யார்?
செந்தில் கோல்டன் அணி வீரர் விஷ்ணுவுக்கு, 'பெடரேஷன் ஆப் கோயம்புத்துார் அபார்ட்மென்ட் அசோசியேஷன்ஸ்' ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், ஆட்ட நாயகன் விருது வழங்கினார்.
இரண்டாம் அரையிறுதியில், ஆர்.எஸ்.புரம், ரமணிஸ் கோசி டவர்ஸ் அணியும், ராமானுஜம் நகர், 'ஹோப்ஸ் 11' அணியும் மோதின. 'டாஸ்' வென்ற ரமணிஸ் கோசி டவர்ஸ் அணியினர் பவுலிங் தேர்வு செய்தனர். ஹோப்ஸ் 11 அணி வீரர்கள், 10 ஓவர்களில், 6 விக்கெட் இழப்புக்கு, 88 ரன்கள் எடுத்தனர்.
தொடர்ந்து, 89 ரன்கள் இலக்குடன் பேட்டிங் செய்த ரமணிஸ் கோசி டவர்ஸ் அணியினர், 10 ஓவர்களில், 6 விக்கெட் இழப்புக்கு, 78 ரன்கள் எடுத்தனர். இரு ஓவர்களில், 3 விக்கெட் வீழ்த்திய 'ஹோப்ஸ் 11' அணி வீரர் நித்ய சாய்க்கு, ரமணிஸ் கோசி டவர்ஸ் செயலாளர் கணேசன் ஆட்ட நாயகன் விருது வழங்கினார்.
இறுதிப்போட்டியில், செந்தில் கோல்டன் கேட் அணியும், 'ஹோப்ஸ் 11' அணியும் மோதின. 'டாஸ்' வென்ற செந்தில் கோல்டன் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. பேட்டிங் செய்த ஹோப்ஸ் 11 அணியினர், 10 ஓவர்களில், 4 விக்கெட் இழப்புக்கு, 113 ரன்கள் எடுத்தனர். வீரர் நிரஞ்சன், 45 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து, களம் இறங்கிய செந்தில் கோல்டன் கேட் அணியினர், 10 ஓவர்களில், 7 விக்கெட் இழப்புக்கு, 76 ரன்கள் எடுத்தனர். 37 ரன்கள் வித்தியாசத்தில் 'ஹோப்ஸ் 11' அணி 'சாம்பியன்ஷிப்' பெற்றது. 45 ரன்கள் எடுத்த ஹோப்ஸ் 11 வீரர் நிரஞ்சனுக்கு, வால்ரஸ் நிறுவன உரிமையாளர் வால்ரஸ் டேவிட் ஆட்ட நாயகன் விருது வழங்கினார்.
வால்ரஸ் நிறுவன உரிமையாளர் வால்ரஸ் டேவிட் பேசுகையில், ''குடும்பத்துக்கு நாம் சேர்க்க வேண்டிய செல்வம் ஆரோக்கியம். ஆரோக்கியத்துக்கும், மகிழ்ச்சிக்குமாக, இந்த கிரிக்கெட் போட்டியை, 'தினமலர்' துவங்கியுள்ளது,'' என்றார்.
ஆனந்தாஸ் ஓட்டல் சார்பில், ஸ்பான்சர்ஷிப் வழங்கப்பட்டது.
போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்களும், மகிழ்ச்சியுடனும், திருப்தியுடனும் விடைபெற்றனர்.

