ADDED : ஏப் 09, 2025 06:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; நாளை (ஏப்., 10) மகாவீர் ஜெயந்தி தினம் என்பதால், ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றிகளை வதம் செய்வதற்கும், அதன் இறைச்சியை விற்பனை செய்வதற்கும் தமிழக அரசு தடை செய்துள்ளது.
கோவை மாநகராட்சி பகுதியில், இறைச்சி வியாபாரம் செய்து வரும் வியாபாரிகள், தங்களது கடைகளை அன்றைய தினம் மூடியிருக்க வேண்டும். மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள ஆடு, மாடு அறுவைமனைகளும் செயல்படாது.
அன்றைய தினம் செயல்படும் கடைகள் மீது, மாநகராட்சி சட்டப்படி அபராதம், பறிமுதல் மற்றும் உரிமம் ரத்து போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, மாநகராட்சி எச்சரித்துள்ளது.

