/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்: கோடையில் அதிகாரிகள் அலட்சியம்
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்: கோடையில் அதிகாரிகள் அலட்சியம்
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்: கோடையில் அதிகாரிகள் அலட்சியம்
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்: கோடையில் அதிகாரிகள் அலட்சியம்
ADDED : மார் 01, 2024 12:16 AM

கோவை;பொள்ளாச்சி அருகே, கோவை மாநகராட்சிக்கு குடிநீர் கொண்டு செல்லும் குழாய் உடைந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் சீரமைக்கப்படாமல் உள்ளது.
பொள்ளாச்சி அருகேயுள்ள, ஆத்துப்பொள்ளாச்சியில் ஆழியாறு ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, அங்கேயே சுத்திகரிப்பு செய்யப்பட்டு, கிணத்துக்கடவு பேரூராட்சி மற்றும் கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட, குறிச்சி, குனியமுத்துார் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லும், குறிச்சி - குனியமுத்துார் குடிநீர் திட்டம் செயல்படுகிறது.
இந்த திட்டத்தில், ஆச்சிபட்டி, கிணத்துக்கடவில் நீருந்து நிலையங்கள் உள்ளன. ஆற்றுப்படுகையில் இருந்து, 50 கி.மீ., தொலைவுக்கு குடிநீர் கொண்டு செல்லும் போது, மின்தடை ஏற்படும் போது, குழாயில் காற்றழுத்தம் ஏற்பட்டு, பலவீனமான இடங்களில் உடைப்பு ஏற்படுகிறது.
குழாயில், குளத்துார், போடிபாளையம், ஜமீன் ஊத்துக்குளி பகுதிகளில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. போடிபாளையத்தில் ஏற்பட்ட குழாய் உடைப்பு இரு மாதங்களாக சீரமைக்கப்படாமல் இருந்தது. இதனால், ரோடும் சேதமடைந்தது.
இதையடுத்து, கடந்த மாதம் உடைப்பு சீரமைக்கப்பட்டு, குடிநீர் வினியோகம் துவங்கப்பட்டது. ஆனால், ஒரு நாள் கூட தாக்குப்பிடிக்காமல், அதே இடத்தில் மறுபடியும் குழாய் உடைந்து, குடிநீர் வீணாகிறது.
குழாயில் இருந்து, வெளியேறும் தண்ணீர் சாக்கடையில் கலந்து வீணாகிறது. இதுபற்றி, அப்பகுதி மக்கள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதற்கு, 'தற்போது தான், குழாய் உடைப்பு சீரமைக்கப்பட்டது. மறுபடியும் உடைப்பு ஏற்பட்டிருந்தால் உடனடியாக சீரமைக்க முடியாது,' என, அலட்சியமாக பதிலளித்துள்ளனர்.
இதனால், அதிருப்தியடைந்த மக்கள், குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்கவும், ரோடு சேதமடைவதை தடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

