/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நியூஸ்கீம் ரோட்டில் பள்ளத்தால் தொடரும் விபத்துகளால் பாதிப்பு
/
நியூஸ்கீம் ரோட்டில் பள்ளத்தால் தொடரும் விபத்துகளால் பாதிப்பு
நியூஸ்கீம் ரோட்டில் பள்ளத்தால் தொடரும் விபத்துகளால் பாதிப்பு
நியூஸ்கீம் ரோட்டில் பள்ளத்தால் தொடரும் விபத்துகளால் பாதிப்பு
ADDED : மார் 11, 2024 08:46 PM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நியூஸ்கீம் ரோட்டின் நடுவே உள்ள பள்ளத்தால், விபத்து ஏற்படுவதுடன், வாகனங்கள் பழுதாகின்றன. இதனால், வாகன ஓட்டுநர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் இருந்து பல்லடம், உடுமலை ரோட்டிற்கு செல்லும் வாகனங்கள், நியூஸ்கீம் ரோடு வழியாக சென்று வருகின்றன.
இந்த ரோட்டில் அதிகளவு மருத்துவமனைகள், வங்கிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அதிகளவு உள்ளதால், பொதுமக்கள் நடமாட்டம் அதிகளவு உள்ளது.
இந்நிலையில், நியூஸ்கீம் ரோடு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி அருகே, ரோட்டின் இருபுறமும் குழாய் பதிப்பு பணிக்காக தோண்டப்பட்டது. இந்த பள்ளம் முறையாக மூடப்படாமல் உள்ளதால் விபத்துகள் ஏற்படுகிறது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பொள்ளாச்சி நியூஸ்கீம் ரோட்டில், குழாய் பதிப்புக்காக தோண்டப்பட்ட பள்ளம் முறையாக மூடப்படாமல் உள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்கள், பள்ளம் தெரியாமல் சென்று விபத்துக்குள்ளாகின்றனர்.
பணிகள் முடிந்து பல நாட்களாகியும் சீரமைக்காததால் விபத்துகளில் சிக்குவோர்சிகிச்சைக்காக செல்லும் நிலை காணப்படுகிறது.
மேலும், வேகமாக செல்லும் வாகனங்கள் பள்ளத்தில் அடிபட்டு பழுதாகின்றன. இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து, உடனடியாக நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

