ADDED : செப் 14, 2025 11:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன் பாளையம் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா மாருதி உடற்கல்வியியல் கல்லூரியில், ஹாக்கி குறித்த மாநில அளவிலான பயிற்சி பட்டறை மற்றும் நடுவர் தேர்வு நடந்தது.
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா மாருதி உடற்கல்வியியல் கல்லூரியின் செயலாளர் சுவாமி வீரகானந்தர் தலைமை வகித்தார். முதல்வர் ஜெயபால் வரவேற்றார். ஹாக்கி பயிற்சி பட்டறையின் முக்கியத்துவம் குறித்து, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் உதவி பேராசிரியர் சுவாமிநாதன் விளக்கம் அளித்தார். பயிற்சி பட்டறையின் முக்கியத்துவம் குறித்தும், தேர்வு குறித்தும் தமிழ்நாடு ஹாக்கி அசோசியேஷன் பொது மேலாளர் செந்தில் ராஜ்குமார் விளக்கினார்.
160க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாருதி உடற்கல்வியியல் கல்லூரியின் இணை பேராசிரியர் அமுதன் நன்றி கூறினார்.