/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோதண்டராமஸ்வாமி கோவிலில் ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி மஹோத்ஸவம்
/
கோதண்டராமஸ்வாமி கோவிலில் ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி மஹோத்ஸவம்
கோதண்டராமஸ்வாமி கோவிலில் ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி மஹோத்ஸவம்
கோதண்டராமஸ்வாமி கோவிலில் ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி மஹோத்ஸவம்
ADDED : ஏப் 18, 2025 06:39 AM
கோவை; ராம்நகர் கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில் ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி மஹோத்ஸவம் நேற்று துவங்கியது.
கோதண்டராமர் கோவிலில் உள்ள அபிநவ வித்யா தீர்த்த பிரவசன மண்டபத்தில் கோவை வரஹூர் ஸ்ரீ நாராயண தீர்த்தரின் ஸ்ரீ கிருஷ்ணலீலா தரங்கிணீ மஹோத்ஸவம் காலை 9:00 மணிக்கு துவங்கியது.
ஸ்ரீ கிருஷ்ணலீலா தரங்கிணி கீதங்களின் 1 மற்றும் 2 தரங்கங்களை ஹைதராபாத் ஸ்ரீராம் பாகவதர் குழுவினர் பாராயணம் செய்தனர். தொடர்ந்து பாகவதோத்தமர்கள் பாராயணம் செய்தனர். அதற்கு விளக்கத்தை ஸ்ரீராம்பாகவதர் குழுவினர் அளித்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் தலா இரண்டு தரங்கங்களை ஒவ்வொரு பாகவத குழுவினர் இசையோடு பாராயணம் செய்கின்றனர். ஏப்.,19 அன்று 11 மற்றும் 12 தரங்கங்கள் பாராயணம் செய்யப்படுகிறது. ஏப்.,20 அன்று காலை 8 மணிக்கு ராம்நகர் பஜனை கோஷ்டியரின் உஞ்சவிருத்தி பஜனை நடக்கிறது.
காலை 9:00 மணிக்கு ஸ்ரீ ருக்மணி கல்யாண மஹோத்ஸவம் நடக்கிறது. இந்நிகழ்வை மோஹனுார் ஸ்ரீகாந்த் கவுண்டில்யன் பாகவதர் மற்றும் கோவிந்தபுரம் ஸ்ரீ ஞானேஸ்வர் ராமகிருஷ்ணன் பாகவதர் குழுவினர் நடத்தி வைக்கின்றனர். மாலை 4:00 மணிக்கு வசந்த கேளிக்கை, ஆஞ்சநேய உற்சவத்தை ஹரித்துவார மங்களம் ஸ்ரீராம் கோபால் பாகவதர் குழுவினர் நிகழ்த்தி வைக்கின்றனர்.

