/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறப்பு ரெய்டு; இரு நாளில் 74 வழக்குகள் பதிவு; கூடுதல் எஸ்.பி., அதிரடி நடவடிக்கை
/
சிறப்பு ரெய்டு; இரு நாளில் 74 வழக்குகள் பதிவு; கூடுதல் எஸ்.பி., அதிரடி நடவடிக்கை
சிறப்பு ரெய்டு; இரு நாளில் 74 வழக்குகள் பதிவு; கூடுதல் எஸ்.பி., அதிரடி நடவடிக்கை
சிறப்பு ரெய்டு; இரு நாளில் 74 வழக்குகள் பதிவு; கூடுதல் எஸ்.பி., அதிரடி நடவடிக்கை
ADDED : அக் 14, 2024 09:26 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், கடந்த இரண்டு நாட்களில் நடந்த சிறப்பு ரெய்டில், கஞ்சா, மதுபான பாட்டில்கள் விற்பனை என, 74 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 74 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள பொள்ளாச்சியில், சில்லிங் மது விற்பனை, கஞ்சா, போதை வஸ்துக்கள் விற்பனை அமோகமாக நடக்கிறது. அதிலும், பஸ் உள்ளிட்ட பகுதிகளில், கேரளாவில் இருந்து கஞ்சா, லாட்டரி சீட்டுகள் வாங்கி வந்து விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், கடந்த, இரண்டு நாட்களாக கூடுதல் எஸ்.பி., சிர்ஷிடி சிங் தலைமையில், எஸ்.ஐ., கவுதம் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர், சிறப்பு ரோந்து சென்று, சட்ட விரோத மது விற்பனை உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்தனர்.
கடந்த, 12ம் தேதி கிழக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில், ஒரு குட்கா வழக்கும், மது விற்பனை இரு வழக்குகளும்; மகாலிங்கபுரம் போலீஸ் எல்லையில், குட்கா, மதுவிற்பனை செய்ததாக தலா ஒரு வழக்கு, மேற்கு ஸ்டேஷனில் ஐந்து லாட்டரி வழக்கு, தாலுகா ஸ்டேஷனில், இரண்டு லாட்டரி வழக்கு, ஒரு மதுபான விற்பனை வழக்கும் பதிவாகியுள்ளன.
அதே போன்று, வடக்கிபாளையத்தில் லாட்டரி, குட்கா விற்பனை செய்ததாக தலா ஒரு வழக்கும்; நெகமத்தில், கள் விற்றதாக வழக்குகள், கோமங்கலத்தில் மது விற்றதாக மூன்று வழக்குகள் என மொத்தம், 24 வழக்குகள் பதிவாகியுள்ளன.
நேற்று முன்தினம் மேற்கொண்ட ரெய்டில், கிழக்கு ஸ்டேஷனில் இரு லாட்டரி வழக்கு, புகையிலை பொருட்கள் விற்றதாக ஒரு வழக்கு; மகாலிங்கபுரத்தில், லாட்டரி, மது விற்றதாக தலா ஒரு வழக்கு; மேற்கு ஸ்டேஷனில் லாட்டரி விற்றதாக 13 வழக்குகள், மதுவிற்றதாக இரு வழக்குகளும் பதிவாகின.
தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் சூதாட்டம், லாட்டரி, மதுபானம் விற்பனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
வடக்கிபாளையத்தில், புகையிலை பொருட்கள் வழக்கு, நெகமத்தில், லாட்டரி, கள் விற்பனை வழக்கு, கோமங்கலத்தில் புகையிலை, மதுபானம் விற்பனை என, 50 வழக்குகள் பதிவானது. கடந்த, இரண்டு நாட்களில் மட்டும், 74 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 74 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஸ்சில் ரெய்டு
தமிழக - கேரள எல்லையான கோபாலபுரம் சோதனச்சாவடியில், கூடுதல் எஸ்.பி., தலைமையிலான போலீசார் ஆய்வு செய்தனர். பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி வந்த கேரளா அரசு பஸ்சை சோதனையிட்டனர்.
அதில், கேரளா மலப்புரத்தைச் சேர்ந்த முகமது சபீர் என்பவர் விற்பனைக்காக கஞ்சா கொண்டு வந்தது தெரியவந்ததது. அவரை கைது செய்த போலீசார், இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தொடருமா?
பொள்ளாச்சியில், பஸ், ரயில்கள் வழியாக கஞ்சா, புகையிலை பொருட்கள் கடத்தப்படுகிறது. இதை கட்டுப்படுத்த முடியாத சூழலில், லாட்டரிகளும் அதிகளவு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன.
இதை தடுக்க, போலீசார் உரிய கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது, சிறப்பு ரெய்டு நடத்துவது போன்று, தினமும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தினால் கட்டுப்படுத்த முடியும்.

