/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர் நலன் குறித்து கல்லுாரியில் கருத்தரங்கு
/
மாணவர் நலன் குறித்து கல்லுாரியில் கருத்தரங்கு
ADDED : ஜூலை 24, 2025 08:30 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரி மின்னணு வணிகவியல் துறை சார்பில், எதிர்கால தலைவர்களை உருவாக்கும் எரிபொருள் மற்றும் மாணவர் நலனில் முக்கிய பங்கு என்ற தலைப்பில், கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி முதல்வர் மாணிக்க செழியன் தலைமை வகித்தார். மின்னணு வணிகவியல் துறை தலைவர் இணை பேராசிரியர் சத்தியபாமா வரவேற்றார்.
பொள்ளாச்சி இருதய டாக்டர் ராமகிருஷ்ணன், மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்துதல், உணவு முறை, நல்லொழுக்கம், ஆரோக்கியம் மற்றும் சமூக சிந்தனை ஆகியவை குறித்து பேசினார்.
கல்வியியல் இயக்குனர் சரவணபாபு, மாணவர் நலன் டீன் முனைவர் முத்துக்குமரன், நிர்வாக மேலாளர் ரகுநாதன், பேராசிரியர்கள் பங்கேற்றனர். உதவி பேராசிரியர் கிருத்திகா நன்றி கூறினார்.

