/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேட்டுப்பாளையத்தில் இரண்டு லாட்ஜ்களுக்கு 'சீல்'
/
மேட்டுப்பாளையத்தில் இரண்டு லாட்ஜ்களுக்கு 'சீல்'
ADDED : பிப் 02, 2024 10:44 PM
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில் விபசாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட 2 தனியார் லாட்ஜ்களுக்கு வருவாய் துறையினர் நேற்று சீல் வைத்தனர்.
மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் விபசாரம் நடப்பதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து போலீசார் மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் தீவிர ரோந்து மேற்கொண்டனர்.
அப்போது தனியார் லாட்ஜ்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இதில் இரண்டு தனியார் லாட்ஜ்களில் விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து விபசார வழக்கில், 1 பெண் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் விபசாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட, கல்லார் ரயில்வே கேட் அருகே உள்ள ஒரு தனியார் லாட்ஜும், மைதான் மாரியம்மன் கோவில் அருகே உள்ள ஒரு லாட்ஜும் என 2 தனியார் லாட்ஜ்களை நேற்று வருவாய் துறையினர் வடக்கு ஆர்.டி.ஓ கோவிந்தன், மேட்டுப்பாளையம் தாசில்தார் சந்திரன் தலைமையில் சீல் வைத்தனர்.

