/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாற்று திறனாளிகளுக்கு கிடைத்தது ஸ்கூட்டர்
/
மாற்று திறனாளிகளுக்கு கிடைத்தது ஸ்கூட்டர்
ADDED : மார் 14, 2026 06:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: மாற்று திறனாளிகளுக்கு கலெக்டர் பவன்குமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
137 பேருக்கு தலா ரூ.1,01,800 விலையுள்ள பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. ஒன்றரை மாதமாக கவனிப்பார் இல்லாமல் வெயிலிலும் தூசியிலும் அவதிப்பட்ட ஸ்கூட்டர்கள், மாற்று திறனாளிகளை சுமந்து கொண்டு, கலெக்டர் அலுவலக வளாகத்தை விட்டு குதூகலமாக வெளியேறின. தலா ரூ.7 ஆயிரம் விலையுள்ள சக்கர நாற்காலிகளையும் 4 பேருக்கு கலெக்டர் வழங்கினார். துணை மேயர் வெற்றி செல்வன் மற்றும் வசந்த ராம்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

