/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலை விபத்தில் பள்ளி மாணவன் பலி
/
சாலை விபத்தில் பள்ளி மாணவன் பலி
ADDED : டிச 15, 2025 05:35 AM

வால்பாறை: வால்பாறை அடுத்துள்ள உருளிக்கல் எஸ்டேட்டை சேர்ந்தவர் சூர்யா,17. நல்லமுடி எஸ்டேட்டை சேரந்தவர் தென்னரசு,17, இருவரும் வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன் தினம் காலை, 8:30 மணிக்கு, ஸ்டேன்மோர் ரோடு வழியாக வால்பாறைக்கு இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்தனர். அப்போது எதிரே வந்த பொலிரோ பிக் அப் வேன் மீது, பைக் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், பைக்கை ஓட்டி சென்ற மாணவன் சூர்யாவுக்கு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதே போல் பைக்கின் பின்னால் அமர்ந்து வந்த தென்னரசுவிற்கு, வலது கை மற்றும் உதட்டில் காயம் ஏற்பட்டது.
இருவருக்கும், வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பின்னர், தலையில் பலத்த காயமடைந்த சூர்யா, கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து, வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

