/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலை விபத்துகளில் உயிர்களை... காக்க... காக்க! : மாநகர போலீசார் புதிய திட்டம்
/
சாலை விபத்துகளில் உயிர்களை... காக்க... காக்க! : மாநகர போலீசார் புதிய திட்டம்
சாலை விபத்துகளில் உயிர்களை... காக்க... காக்க! : மாநகர போலீசார் புதிய திட்டம்
சாலை விபத்துகளில் உயிர்களை... காக்க... காக்க! : மாநகர போலீசார் புதிய திட்டம்
UPDATED : டிச 29, 2025 05:06 AM
ADDED : டிச 29, 2025 05:04 AM

கோவை:விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க அந்தந்த பகுதிகளில், மாநகரின் முக்கிய இடங்களில், அனைத்து வசதிகளும் கூடிய ஆம்புலன்ஸ்களை நிறுத்த, மாநகர போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மனைவி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக தான் சென்று கொண்டிருந்தது அந்த குடும்பத்தலைவரின் வாழ்க்கை. ஆனால், ஒரு நொடி தான். அத்தனையையும் மாற்றி விட்டது அந்த விபத்து.
விபத்தில் பலத்த காயமடைந்த அவரை, அருகில் இருந்த நல்ல உள்ளங்கள் கொண்டவர்கள் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், '10 நிமிடத்துக்கு முன் வந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம்' என்றபோது, அடக்க முடியாமல் கதறுவதை தவிர, அவரால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை.
![]() |
இது போல் பத்து நிமிட தாமதம்தான், இன்று பலர் உயிரிழக்க காரணமாகி விடுகிறது. இந்த உயிரிழப்புகளை தடுக்க, விபத்து உயிரிழப்புகள் ஏற்பட்ட இடங்களில், விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையங்களை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கோவையில், கடந்த ஜன., முதல், அக்., வரை, சாலை விபத்துகளில், 227 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில், 111 பேர் விபத்து நடந்த இடத்திலும், 80 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும், 36 பேர் சிகிச்சையின் போதும், உயிரிழந்துள்ளனர் .
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் கூறுகையில், ''சாலை விபத்துகளை தவிர்க்க, தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. விபத்துகள் அதிகம் நடக்கும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு தனியார் பங்களிப்புடன், அனைத்து வசதிகளும் கூடிய ஆம்புலன்ஸ்களை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
![]() |
இதன் மூலம் விபத்து நடந்த உடன், அவர்களுக்கு விரைந்து முதலுதவி கிடைக்கும். உயிரிழப்புகள் தடுக்கப்படும். இதற்கு சில அமைப்புகள் முன்வந்துள்ளன. அவர்களுடன் இணைந்து திட்டம் செயல்படுத்தப்படும்,'' என்றார்.



