/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.1 கோடி நகை கொள்ளை; கோவை அருகே துணிகரம்
/
ரூ.1 கோடி நகை கொள்ளை; கோவை அருகே துணிகரம்
UPDATED : டிச 27, 2025 07:36 AM
ADDED : டிச 27, 2025 04:20 AM

போத்தனுார்: கோவையில், போலி சாவி போட்டு வீட்டை திறந்து, பீரோவில் வைத்திருந்த, 1 கோடி ரூபாய் மதிப்புள்ள, 103 சவரன் தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.
கோவை, குனியமுத்துார் அடுத்து நரசிம்மபுரம், அய்யப்பா நகரை சேர்ந்தவர் மார்ட்டின் மனைவி ஜெபா, 43; தனியார் பள்ளி ஆசிரியர். இரு மகள்களுடன் வசித்து வருகிறார்.
டிச., 24ம் தேதி நள்ளிரவு, உறவினர் இறப்புக்காக குடும்பத்துடன் சாத்தான்குளம் சென்றார். நே ற்று காலை வீடு திரும்பினர். வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பீரோ திறந்த நிலையில், பொருட்கள் சிதறிக்கிடந்தன. பீரோவில் இருந்த, 103 சவரன் தங்க நகைகள், 10,000 ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தன. இவற்றின் மொத்த மதிப்பு, 1 கோடி ரூபாய்.
குனியமுத்துார் போலீசார் கொள்ளை நடந்த வீட்டில் விசாரணை நடத்தினர். இதில், கொள்ளையர்கள் பூட்டை உடைக்காமல், போலி சாவி போட்டு கதவை திறந்து, கைவரிசை காட்டியது தெரிந்தது. அப்பகுதி, 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளை போலீசார் தேடுகின்றனர்.

