/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிதிலமடைந்த ரோடு சீரமைக்க கோரிக்கை
/
சிதிலமடைந்த ரோடு சீரமைக்க கோரிக்கை
ADDED : டிச 26, 2025 06:36 AM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு மயானம் வழியாக, கோதவாடி செல்லும் ரோடு ஆங்காங்கே சேதமடைந்திருப்பதால் வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர்.
கிணத்துக்கடவு மயானத்தில் இருந்து, இம்மிடிபாளையம், தேவரடிபாளையம் மற்றும் கோதவாடி கிராமங்களுக்கு செல்லும் ரோடு உள்ளது. இதில், கோதவாடி ரோடு மட்டும் ஆங்காங்கே சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் பலர் ரோட்டில் பயணிக்க சிரமப்படுகின்றனர்.
இந்த ரோடு அருகே, டாஸ்மாக் மதுக்கடை இருப்பதால், இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு பைக் ஓட்டுநர்கள் இவ்வழியாக செல்லும் போது, நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். இதனால் ஓட்டுநர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, இந்த ரோட்டை விரைவில் சீரமைக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.
ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'இந்த ரோட்டை ஊரக சாலைகள் பராமரிப்பு 2025-26 திட்டம், வாயிலாக சீரமைப்பு செய்ய திட்ட அறிக்கை தயார் செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி, அனுமதி பெறப்பட்டுள்ளது. விரைவில் ரோடு சீரமைகப்படும்,' என்றனர்.

