/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.16 கோடி நிலம் மீட்பு
/
மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.16 கோடி நிலம் மீட்பு
ADDED : மார் 11, 2024 01:33 AM
கோவை;கோவை மாநகராட்சிக்கு சொந்தமான, 16 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டது.
கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம், வார்டு எண், 71க்கு உட்பட்ட பாஷ்யாகாரலு வீதியில், 20 சென்ட் பரப்புளவு கொண்ட மாநகராட்சிக்கு சொந்தமான இரண்டு மனைகள் உள்ளன. இந்த மனைகளை இரண்டு நபர்கள், ஆக்கிரமிப்பு செய்து போலி ஆவணம் தயாரித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். ஐகோர்ட் உத்தரவுப்படி, கோவை மாவட்ட நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை கடந்த 20 ஆண்டுகளாக நடந்துவந்தது. கடந்த 8ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், 16 கோடி மதிப்புள்ள, 20 சென்ட் பரப்பளவு கொண்ட மனைகள் மாநகராட்சிக்கு சொந்தமானது என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கோர்ட் உத்தரவுப்படி, 20 சென்ட் நிலம், மாநகராட்சி சார்பில் மீட்கப்பட்டுள்ளதாக கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் தெரிவித்துள்ளார்.

