/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ராஜவாய்க்கால் ஏரி புனரமைப்பு பணி

 ராஜவாய்க்கால் ஏரி புனரமைப்பு பணி

 ராஜவாய்க்கால் ஏரி புனரமைப்பு பணி

 ராஜவாய்க்கால் ஏரி புனரமைப்பு பணி

 ராஜவாய்க்கால் ஏரி புனரமைப்பு பணி

ADDED : பிப் 22, 2026 06:38 AM


Google News
Latest Tamil News
பெ.நா.பாளையம்: கவுசிகா நீர் கரங்கள், சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு அமைப்பு வாயிலாக, சின்னவேடம்பட்டி ராஜவாய்க்கால் ஏரி சீரமைப்பு பணி நடந்தது.

முன்னிலை வகித்த நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் சிவக்குமார் பேசுகையில், ''சின்ன வேடம்பட்டி ஏரி செயற்கையாக உருவாக்கப்பட்டது. இதற்கான நீர்வழி பாதையை உருவாக்க விவசாயிகள் பலர் நிலம் அளித்துள்ளனர். சின்னதடாகம், மாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் பருவமழைக் காலங்களில் பெய்யும் மழைநீர் ராஜவாய்க்கால் வழியாக சின்னவேடம்பட்டி ஏரிக்கு வரும். இதனால் சுற்றுப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்,'' என்றார்.

கவுசிகா நீர் கரங்கள் அமைப்பின் அறங்காவலர் செல்வராஜ் பேசுகையில், ''கவுசிகா நீர் கரங்கள் அமைப்பு சார்பில், 20க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் சீரமைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.