sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மின்வினியோகம் தடைபட்டால் சீரமைக்க மழை கால எச்சரிக்கை! தயார் நிலையில் 243 முன்கள பணியாளர்கள்

/

மின்வினியோகம் தடைபட்டால் சீரமைக்க மழை கால எச்சரிக்கை! தயார் நிலையில் 243 முன்கள பணியாளர்கள்

மின்வினியோகம் தடைபட்டால் சீரமைக்க மழை கால எச்சரிக்கை! தயார் நிலையில் 243 முன்கள பணியாளர்கள்

மின்வினியோகம் தடைபட்டால் சீரமைக்க மழை கால எச்சரிக்கை! தயார் நிலையில் 243 முன்கள பணியாளர்கள்


ADDED : ஜூலை 25, 2025 08:57 PM

Google News

ADDED : ஜூலை 25, 2025 08:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; காற்றுடன் பெயும் கனமழையால், மின் வினியோகத்தில் தடை ஏற்பட்டால், அதனை விரைந்து சீரமைக்க, பொள்ளாச்சி கோட்ட மின்வாரியத்தில், 243 முன்கள பணியாளர்கள், தயார் நிலையில் உள்ளனர்.

தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதேநேரம், பொள்ளாச்சி, வால்பாறை, ஆனைமலை, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மழை பெய்கிறது.

மழையை எதிர்கொள்ளும் வகையில், பொள்ளாச்சி கோட்ட மின்வாரியத்திற்கு உட்பட்ட பிரிவு அலுவலகங்களில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மின்கம்பங்கள், மின் கம்பிகள், தளவாட பொருட்கள், வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

களப்பணியாளர்கள் இயற்கை இடர்பாடுகளின் போது துரிதமாகவும், உடனடியாகவும் நிவர்த்தி செய்ய வாரந்தோறும், பாதுகாப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டுகிறது. ஒயர்மேன்கள் எப்போதுமே, 'பெல்ட் ரோப், ஓல்டேஜ் டிடெக்டர், எர்த் ராடு, ேஹண்ட் கிளவுஸ்' உள்ளிட்ட தளவாடப் பொருட்களை வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

காற்றுடன் மழை பெய்யும் போது, மரங்கள் சாய்ந்து, மின்கம்பிகள் அறுந்து விழ வாய்ப்புள்ளது. இதனால், கம்பங்கள் சாய்ந்து நிற்கவும் வாய்ப்புள்ளது. அப்போது, துரிதமாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இதற்காக, பொள்ளாச்சி மின்வாரிய கோட்டத்தில், ஒயர்மேன், ெஹல்ப்பர், போர்மேன், எல்.ஐ., என, 243 முன்கள பணியாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இரவு நேரங்களில் மட்டும், டிரான்ஸ்பார்மர் பீடரில் பழுது ஏற்பட்டால், நிவர்த்தி செய்யப்படும்.

வீட்டு இணைப்புகள், பகல் நேரத்தில், சீரமைக்கப்படுகிறது. பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும் வருகிறது.

மழை தீவிரமடைந்துள்ள நிலையில், தரையில் அறுந்து கிடக்கும் மின்கம்பிகள், தாழ்வான மற்றும் தொய்வான மின்கம்பிகளை தொடக் கூடாது. மரங்கள், கிளைகள் முறிந்து அருகில் உள்ள மின்கம்பிகள் அல்லது மின்கம்பங்களில் விழுந்து கிடந்தால் அருகில் செல்ல வேண்டாம்.

ஈரமான கைகளுடன் சுவிட்சுகள் மற்றும் பிளக்குகளை தொடுதல் கூடாது. கால்நடைகளை மின்கம்பங்களில் கட்டக்கூடாது. மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்பகிர்வு பெட்டிகள், ஸ்டே ஒயர்கள் அருகில் செல்லவோ, மின்கம்பத்தில் கயிறு கட்டி துணி உலர்த்தவோ கூடாது.

விவசாய நிலத்திலும், பொது இடங்களிலும் மினகம்பி அறுந்து கிடந்தாலோ, மரம் விழுந்து கிடந்தாலோ, உடனடியாக மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மழை காலத்தில், மிகுந்த முன் எச்சரிக்கையுடன் செயல்பட்டு மின் விபத்துக்களை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us