/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குண்டும் குழியுமா இருக்குது புலியகுளம் ரோடு!
/
குண்டும் குழியுமா இருக்குது புலியகுளம் ரோடு!
ADDED : நவ 05, 2024 06:13 AM

இரவில் 'ஆப்' பகலில் 'பளிச்'
கோவை - மேட்டுப்பாளையம் ரோடு, ராஜிவ்காந்தி நகர் பகுதியில் மாலைப்பொழுதில் இருட்டிய பின் தெருவிளக்கு எரிவதில்லை. தாமதமாக எரியத் துவங்கி, பகலில் தொடர்ந்து எரிகிறது. இதனை சரிசெய்து, சரியான நேரத்தில் எரியச் செய்ய வேண்டும்.
- காயத்ரி, ராஜிவ்காந்தி நகர்
இருளில் மக்கள்
கோவை மாநகராட்சி, 56வது வார்டு நேதாஜிபுரம் கருப்பகவுண்டர் வீதியில், தெருவிளக்குகள் எரிவதில்லை. மின்கம்பத்தில் கிளாம்பு இல்லை என கூறி, விளக்கை கழற்றிச் சென்று, இரண்டு மாதங்கள் ஆகின்றன.
- செல்வராஜ், நேதாஜிபுரம்.
நாய்களால் அச்சம்
கவுண்டம்பாளையம் பி அண்டு டி காலனி பகுதியில், வார்டு 33ல், 20க்கும் மேற்பட்ட நாய்கள் உள்ளன. குழந்தைகள் விளையாடுவதற்காக வெளியே செல்ல அனுமதிக்க முடியவில்லை. நடந்து செல்லவே அச்சமாக உள்ளது.
- ராஜன், கவுண்டம்பாளையம்.
வீணாகும் குடிநீர்
கணபதி, 49வது வார்டு, செக்கான் தோட்டம் 4வது வீதியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வீணாகி தெருக்களில் வழிந்தோடிக் கொண்டிருக்கிறது.
- சுரேஷ், செக்கான் தோட்டம்.
சாக்கடை துார்வாரணும்
சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்டு,ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் அருகேயுள்ள சாக்கடையில் மண் நிறைந்துள்ளது. மழைக்காலத்தில் சாக்கடையுடன் மழை நீர் கலந்து ரோடுகளில் கணுக்காலுக்கு மேல் தண்ணீர் தேங்குகிறது. வாகனங்களில் செல்லவோ, நடந்து செல்லவோ மிகவும் சிரமமாக உள்ளது. பல முறை இதுகுறித்து புகார் தெரிவித்தும் பலனில்லை. கவுன்சிலர் நேரில் வந்து பார்ப்பது கூட இல்லை. தேவை உடனடி நடவடிக்கை.
- பிரபு, சிங்காநல்லுார்.

