/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழில்நுட்ப உதவியுடன் துாய்மையாகும் கழிவு நீர் குட்டை
/
தொழில்நுட்ப உதவியுடன் துாய்மையாகும் கழிவு நீர் குட்டை
தொழில்நுட்ப உதவியுடன் துாய்மையாகும் கழிவு நீர் குட்டை
தொழில்நுட்ப உதவியுடன் துாய்மையாகும் கழிவு நீர் குட்டை
ADDED : பிப் 17, 2025 10:45 PM

பெ.நா.பாளையம்; துடியலுார் அருகே உருமாண்டம்பாளையம் செல்லும் வழியில் உள்ள கழிவு நீர் குட்டையை, தொழில்நுட்ப உதவியுடன் துாய்மையாக்கும் பணி துவங்கி உள்ளது.
கோவை மாநகராட்சி, 14வது வார்டுக்கு உட்பட்ட உருமாண்டம்பாளையம் அரசு ஆரம்பபள்ளி அருகே பழமையான கழிவு நீர் குட்டை உள்ளது.
இக்குட்டைக்கு தினமும், 8 லட்சம் லிட்டர் சாக்கடை கழிவு நீர் வருகிறது. குட்டைக்கு அருகே அரசு மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் உள்ளதால், நோய் தொற்று ஏற்படாமல் இருக்கவும், நிலத்தடி நீரை பாதுகாக்கவும், இக்குட்டையை துாய்மைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோவை மாநகராட்சியிடம் அப்பகுதி விவசாயிகளும், தன்னார்வ தொண்டு அமைப்புகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.
இதையடுத்து மாநகராட்சியுடன் சிறுதுளி அமைப்பினர் இணைந்து, தொழில்நுட்ப உதவியுடன் கெமிக்கல் ஸ்ப்ரே வாயிலாக உருமாண்டம்பாளையம் கழிவு நீர் குட்டையை சுத்திகரிக்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு ஆண்டு இந்த வேலை நடைபெற உள்ளது. மாநகராட்சி சார்பில் குட்டையை சுற்றிலும் நடைபாதை, தெருவிளக்குகள் மற்றும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கழிவு நீரை சுத்திகரிக்கும் திட்டத்தை சிறுதுளி அமைப்பின் தலைவர் வனிதா மோகன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், 14வது வார்டு கவுன்சிலர் சித்ரா தங்கவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

