/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அக்கம் பக்கம் பார்க்க வைக்கும் பி.எஸ்.ஆர்., சில்க்ஸ்
/
அக்கம் பக்கம் பார்க்க வைக்கும் பி.எஸ்.ஆர்., சில்க்ஸ்
அக்கம் பக்கம் பார்க்க வைக்கும் பி.எஸ்.ஆர்., சில்க்ஸ்
அக்கம் பக்கம் பார்க்க வைக்கும் பி.எஸ்.ஆர்., சில்க்ஸ்
ADDED : அக் 24, 2024 10:01 PM

நம்மை அற்புதமாய் வெளிப்படுத்த உதவி செய்வதில், முக்கிய பங்கு ஆடை ரகங்களுக்கு தான். பெண்கள் இதில் அதிகமாகவே மெனக்கெடுவர். இதில் உச்சபட்ட ஆடை என்பது பட்டு ரகங்கள். அதை அட்டகாசமாய், அமர்க்களமாய் கொடுத்து, வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது, கோவை நுாறடி சாலையில் உள்ள பி.எஸ்.ஆர்., சில்க் சாரீஸ்.
தரைதளத்தில், ரூ.300ல் இருந்து 1,300 ரூபாய் வரை, பைலும் காட்டன், லினன் பிரின்ட், சில்க் காட்டன் பிரின்ட், செமி ரா சில்க், பிரின்டட் காட்டன் (ஜெய்ப்பூர், கலம்கரி, பெங்களூரு, கத்வால், தார்வார், சுங்குடி, கோவை காட்டன்), சிந்தடிக், சிபான் ஜார்கெட், மால்குடி சேரிஸ் ஆகியவை, கண் கவர் ரகங்களில் வைக்கப்பட்டுள்ளன.
முதல் தளத்தில், ரூ.1,500ல் இருந்து 15 ஆயிரம் மதிப்பு வரை, ஹாட் சில்க், செமி சாப்ட் சில்க்ஸ், சில்க் காட்டன் ஹை, செமி ஜூட், பட்டோலா சில்க் காட்டன், ஆர்கன்ஸா சாரீஸ், காஞ்சிபுரம் காட்டன், காதி பிரின்ட் கத்வால் சில்க், மங்களகிரி மற்றும் மகேஸ்வரி காட்டன் ஆகியவை, எதைப் பார்த்தாலும் வாங்கிக் கொள்ளும் வகையில், வித்தியாசமான ரகங்களில் வசீகரிக்கின்றன.
இரண்டாவது தளத்தில், வித்தியாசமான லைட்டிங் உடன், பட்டு ரகங்கள். காஞ்சிபுரம், போச்சம்பள்ளி, பனாரஸ், மைசூர், ஆரணி, தர்மாவரம், பட்டோலா, இக்கத் சில்க்ஸ் ஆகியவை, பெண்களை நகர விடாமல் செய்கின்றன. பட்டுப்புடவைகள், 4,000 ரூபாயில் இருந்து, 5 லட்சம் மதிப்பு வரை, அம்மாடியோவ்... என்று சொல்லும் வகையில், உங்கள் ரசனைக்கு மேலும் சிறப்பு சேர்க்க, அப்படியொரு கலெக் ஷன்.
மணப்பெண் அலங்காரத்துக்கு என, லெஹன்கா, சோளி ரகங்கள் ஆகியவை, 1,500 ரூபாயில் இருந்து, 50 ஆயிரம் வரை, புதுப்புது டிசைன்களில் வைக்கப்பட்டுள்ளன.
மூன்றாவது தளத்தில், சில்க் சுடிதார் மெட்டீரியல், டூபியான் சில்க்ஸ், காட்டன் சுடிதார் வகைகள், போச்சம்பள்ளி சுடிதார், ரெடிமேட் சுடிதார் ஆகியவை, யுவதிகளின் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த வகை ரகங்கள், 600 ரூபாயில் இருந்து 15 ஆயிரம் வரை இருக்கும் நிலையில், உங்கள் தோற்றத்துக்கு மேலும் பலம் சேர்க்கும்.
இந்த தீபாவளிக்கு, பட்டாசு ஒரு பக்கம், இனிப்பு ஒரு பக்கம் என்று இருந்தாலும், உங்கள் பக்கம், அக்கம் பக்கம் பார்க்க வைப்பதில், பி.எஸ்.ஆர்., சில்க் சாரீஸ், அருமையான தேர்வாக இருக்கும்.

