/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீடற்றோர் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
/
வீடற்றோர் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 07, 2025 10:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; வீடு இல்லாத மக்களின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி, வீடற்றோர் மக்கள் இயக்கம் சார்பில், கோவை கலெக்டர் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இது குறித்து, வீடற்றோர் மக்கள் இயக்க நிர்வாகி சிவா கூறுகையில், ''கோவைபுதுார் பகுதியில் உள்ள மைல் கல் மற்றும் குளத்துப்பாளையம் பகுதியில், 175 அரசு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில், 100 பேருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. 75 பேருக்கு இன்னும் வழங்கப்படவில்லை. அரசு பரிசீலனை செய்து, வீடற்றவர்களுக்கு உடனடியாக வீடு வழங்க வேண்டும்,'' என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

