/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காற்றில் பறந்தது வாக்குறுதி: ஆனாலும் விடுவதாகயில்லை
/
காற்றில் பறந்தது வாக்குறுதி: ஆனாலும் விடுவதாகயில்லை
காற்றில் பறந்தது வாக்குறுதி: ஆனாலும் விடுவதாகயில்லை
காற்றில் பறந்தது வாக்குறுதி: ஆனாலும் விடுவதாகயில்லை
UPDATED : டிச 25, 2025 08:11 AM
ADDED : டிச 25, 2025 05:08 AM
அன்னூர்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஒன்றிய செயலாளர் மயில்சாமி, கோவை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது :
அன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில், வடக்கலூர் ஊராட்சியில், நான்கு ரோடு முதல் சிறுமுகை ரோடு வரை தார் சாலை உள்ளது. இதில் தினமும் அதிக அளவில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை மிகவும் சேதம் அடைந்துள்ளது. குண்டும், குழியுமாக உள்ளதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், மக்களுடன் முதல்வர் முகாமிலும் கிராம சபை கூட்டத்திலும் மனு அளிக்கப்பட்டது.
இதற்காக கடந்த அக்டோபரில் கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தோம். அதிகாரிகள் சாலை அமைக்கப்படும் என உறுதி அளித்ததால் புறக்கணிப்பை கைவிட்டு, கூட்டத்தில் பங்கேற்றோம்.
ஆனாலும் இதுவரை தார் சாலை மேம்படுத்தப்படவில்லை. எனவே, இதை கண்டித்து ஜன. 5ம் தேதி அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.

