/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தனியாரின் பூர்வீக நிலம் வனத்துறைக்கு தானம்
/
தனியாரின் பூர்வீக நிலம் வனத்துறைக்கு தானம்
ADDED : பிப் 07, 2024 10:53 PM

ஆனைமலை : கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை தாலுகாவுக்கு உட்பட்ட அம்முச்சிகவுண்டனுார் கிராமத்தைச் சேர்ந்தவர், ஜி.டி.நாயுடு குழுமத்தின் இயக்குனர் அகிலா.
இவரது தந்தை சண்முகம். இவர்கள், அதேகிராமத்தில், தங்களுக்கு சொந்தமான, 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 15.56 சென்ட் பூர்வீக நிலத்தை, ஆனைமலை புலிகள் காப்பகம், வனவியல் விரிவாக்க கோட்ட விளம்பர சரகம் - 1க்கு, தானமாக நேற்று வழங்கினர்.
இதற்கான, கிரைய பத்திரத்தை, கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் பெற்றுக் கொண்டார். இங்கு, அமைந்துள்ள கட்டடம் உள்ளிட்டவற்றை நாற்றங்கால் மற்றும் இதர வளர்ச்சிப் பணிக்காகவும், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
உதவி வனப்பாதுகாவலர் விஜயகுமார், வனச்சரகர் ஜெயசந்திரன், வனவர் பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

