/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொகுதி மேம்பாட்டு நிதியில் தார் சாலை அமைக்க பூஜை
/
தொகுதி மேம்பாட்டு நிதியில் தார் சாலை அமைக்க பூஜை
ADDED : அக் 23, 2024 12:16 AM
பொள்ளாச்சி : கிணத்துக்கடவு மேற்கு ஒன்றியம், கக்கடவு, பழனிக்கவுண்டன்புதுார் கிராமங்களில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், புதிய தார்சாலை அமைக்கப்படுகிறது. கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், பணிகளை துவக்கி வைத்தார். தொடர்ந்து, அ.தி.மு.க.,வினருக்கு, புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
கிணத்துக்கடவு மேற்கு ஒன்றியச் செயலாளர் திருஞானசம்பந்தம், கக்கடவு ஊராட்சித் தலைவர் பாலு, சோழனுார் ஊராட்சித் தலைவர் சஞ்சீவி, பொள்ளாச்சி கிழக்கு ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார், மாவட்ட ஊராட்சிகள் துணைத் தலைவர் ராதாமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

