/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க அழைப்பு
/
பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : மே 08, 2025 12:53 AM
கோவை; வரும் கல்வியாண்டுக்கான பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை அரசு பாலிடெக்னிக்கில், 2025-26ம் கல்வியாண்டில், மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு சேர்க்கை நடந்து வருகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். http://www.tnpoly.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது பாலிடெக்னிக்கிற்கு நேரில் வந்து, சேவை மையம் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம் என, அரசு பாலிடெக்னிக் முதல்வர் தேன்மொழி தெரிவித்துள்ளார்.
தற்போது, சிவில் (தமிழ், ஆங்கில வழி), மெக்கானிக்கல் (தமிழ், ஆங்கில வழி), எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் (ஆங்கில வழி), எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் (ஆங்கில வழி), கம்ப்யூட்டர் (ஆங்கில வழி), புராடக்சன் (ஆங்கில வழி), இ.சி.இ., (சாண்ட்விச்), இ.சி.ஜி., டெக்னாலஜி, டிப்ளமோ இன் பையர் டெக்னாலஜி, அண்ட் சேப்டி ஆகிய பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பொதுப்பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.150. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கட்டணம் இல்லை. பாலிடெக்னிக்கில் ஆண்டுக்கு, ரூ.2,237 என்ற குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. இலவச பஸ் பாஸ் வசதி, அரசு கல்வி உதவி தொகை உள்ளிட்ட வசதிகள் உள்ளன என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

