/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கள் பற்றி அரசியல் தலைவர்களுக்கு புரிதல் இல்லை! கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் வேதனை
/
கள் பற்றி அரசியல் தலைவர்களுக்கு புரிதல் இல்லை! கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் வேதனை
கள் பற்றி அரசியல் தலைவர்களுக்கு புரிதல் இல்லை! கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் வேதனை
கள் பற்றி அரசியல் தலைவர்களுக்கு புரிதல் இல்லை! கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் வேதனை
ADDED : ஜன 01, 2024 11:01 PM

பொள்ளாச்சி;''கள் பற்றிய புரிதல் இல்லாமல் அரசியல் தலைவர்கள் பேச வேண்டாம்,'' என, தமிழ்நாடு கள் இயக்கம் கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார்.
பொள்ளாச்சி வந்த தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, நிருபர்களிடம் கூறியதாவது:
கொப்பரை கொள்முதல் செய்வதால், அதிகாரிகள், இடைத்தரகர்கள், ஆட்சியாளர்களே பயனாளிகளாக உள்ளனர். விவசாயிகளுக்கு பலன் இல்லை.
கொள்முதல் செய்த கொப்பரையை, 65 ரூபாய்க்கு கார்ப்பரேட்களுக்கு விற்றால் பாதிப்பு தான் ஏற்படும். இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள் பற்றிய புரிதல் இல்லாமல் அரசியல் தலைவர்கள் பேச வேண்டாம். தமிழக அரசு கள் இறக்க அனுமதித்து, கள்ளு கடைகளை திறக்க வேண்டும் என பேசுகின்றனர். அரசியல் அமைப்பு சட்டம் குறித்து தெரியாமல் அரசியல் தலைவர்கள் பேசுவதால், கள் இயக்கம் தொய்வடைகிறது. எனவே, கள் குறித்து புரிதலுடன் பேச வேண்டும்.
ஒரு மரத்து கள், 48 நாட்கள் தொடர்ந்து பருகினால், பல நோய்கள் குணமாகும். கடைகள் இருந்தால் பல மரத்து கள் வரும்; கலப்பட கள்ளாக மாறும் வாய்ப்புள்ளது.
எனவே, கள்ளுக்கு தடையும், கடையும் கூடாது. கள் இறக்குபவர்களை கைது செய்வது சட்ட விரோதமானது. பல மாநிலங்களில் கள் இறக்கி விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால், தமிழகத்தில் மட்டும் கலப்படத்தை காரணம் காட்டி உரிமையை அரசு பறித்துக்கொண்டது. மற்ற மாநிலங்களில் கலப்படத்தை தடுக்க அந்த அரசுகள் நடவடிக்கை எடுக்கின்றன.
கள் தடை செய்யப்பட வேண்டிய போதைப்பொருள் என நிருபித்தால், கள் இயக்கம் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும். வரும், 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன், கள்ளுக்கு விதித்த தடையை ஆளுங்கட்சி நீக்க வேண்டும். இல்லையெனில், 39 தொகுதிகளிலும் தி.மு.க., தோற்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

