/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளஸ் 1 பொதுத் தேர்வு: 96.02 சதவீத தேர்ச்சியுடன் மாநிலத்தில் கோவை முதலிடம்
/
பிளஸ் 1 பொதுத் தேர்வு: 96.02 சதவீத தேர்ச்சியுடன் மாநிலத்தில் கோவை முதலிடம்
பிளஸ் 1 பொதுத் தேர்வு: 96.02 சதவீத தேர்ச்சியுடன் மாநிலத்தில் கோவை முதலிடம்
பிளஸ் 1 பொதுத் தேர்வு: 96.02 சதவீத தேர்ச்சியுடன் மாநிலத்தில் கோவை முதலிடம்
ADDED : மே 14, 2024 07:25 PM

கோவை:பிளஸ் 1 பொதுத் தேர்வில் 96.02 சதவீத தேர்ச்சியுடன் மாநிலத்தில் கோவை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. வழக்கம்போல மாணவர்களைவிட மாணவிகளே அதிக தேர்ச்சி சதவீதம் பெற்றுள்ளனர்.
தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வு மார்ச் 4ம் தேதி துவங்கி 25ம் தேதி நிறைவடைந்தது. இந்த தேர்வை கோவை மாவட்டத்தில், 113 அரசுப் பள்ளிகள், 41 அரசு உதவிபெறும் பள்ளிகள், 324 தனியார் பள்ளிகள் என 478 பள்ளிகளைச் சேர்ந்த 16 ஆயிரத்து 484 மாணவர்கள், 19 ஆயிரத்து 144 மாணவிகள் என 35 ஆயிரத்து 628 பேர் எழுதினர். இதைத்தொடர்ந்து, தேர்வு முடிவுகள் நேற்று காலை 9:30 மணிக்கு வெளியிடப்பட்டன. மாவட்டத்தில், 15 ஆயிரத்து 546 மாணவர்கள், 18 ஆயிரத்து 664 மாணவிகள் என மொத்தம் 34 ஆயிரத்து 210 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில், மாணவர்கள் 94.31 சதவீதம், மாணவிகள் 97.49 சதவீதமும் என மொத்தம் 96.02 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 0.29 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டில் கோவை மாவட்டம் 95.73 சதவீத தேர்ச்சி விகிதம் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம்பிடித்தது. இந்த ஆண்டு 96.02 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் கோவை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
மாணவர்களுக்கு மொபைல் போன் வழியாக மதிப்பெண்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டன. அரசு தேர்வுகள் துறை இணையதளம் மற்றும் அந்தந்தப் பள்ளிகள் வாயிலாக மாணவர்கள் தங்களது ரிசல்ட்டை அறிந்துகொண்டனர்.
இதுகுறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி கூறுகையில், கோவை மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. பள்ளிகளில் தொடர்ந்து சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கடின உழைப்பால் முதலிடம் சாத்தியமாகியுள்ளது. தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு துணைத் தேர்வுகள் ஜூலை மாதத்தில் நடைபெறும். ஆசிரியர்கள் மூலம் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும், என்றார்.

