/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரவு வரை தொடர்ந்தது குழாய் மாற்றும் பணி வீடுகளுக்கு இன்று குடிநீர் சப்ளையாக வாய்ப்பு
/
இரவு வரை தொடர்ந்தது குழாய் மாற்றும் பணி வீடுகளுக்கு இன்று குடிநீர் சப்ளையாக வாய்ப்பு
இரவு வரை தொடர்ந்தது குழாய் மாற்றும் பணி வீடுகளுக்கு இன்று குடிநீர் சப்ளையாக வாய்ப்பு
இரவு வரை தொடர்ந்தது குழாய் மாற்றும் பணி வீடுகளுக்கு இன்று குடிநீர் சப்ளையாக வாய்ப்பு
ADDED : டிச 27, 2025 05:16 AM

கோவை: கோவை - சத்தி ரோட்டில், சரவணம்பட்டி அம்மன் நகர் பகுதியில் 24ம் தேதி இரவு 11.30 மணியளவில், அழுத்தம் தாங்காமல், 1,000 எம்.எம். விட்டமுள்ள சிமென்ட் குடிநீர் குழாய் உடைந்தது. மாநகராட்சி குடிநீர் பிரிவினர், அக்குழாயை வெட்டி அகற்றி விட்டு, 6 மீட்டர் நீளத்துக்கு இரும்பு குழாய் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர்.
அக்குழாயில் இருந்த தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு, வெட்டி அகற்றும் பணி நேற்று முடிந்தது. பின், இரும்பு குழாய் தருவிக்கப்பட்டு, சிமென்ட் குழாயின் இருபுறமும் 'கப்ளிங்' பொருத்தி, இரும்பு குழாய் வெல்டிங் செய்யும் பணி நடந்தது. நேற்று மதியத்துக்குள் பணியை முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. பழைய குழாயை அறுத்தெடுக்க தாமதம் ஏற்பட்டது. மேலும், புதிய குழாயை பொருத்தி வெல்டிங் செய்யும் வேலையை நிதானமாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில், கடந்த மாதம் ஒரு கி.மீ. முன்னதாக உடைந்த குழாயை மாற்றியபோது, மறுநாளே உடைந்தது. அதுபோன்ற பிரச்னை மறுபடியும் ஏற்படாமல், மெதுவாக செய்ததால் நேற்று நள்ளிரவு வரை மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மண்டலங்களுக்கு உட்பட்ட 34 வார்டு பகுதிக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டிருக்கிறது.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''இரும்பு குழாய் பொருத்தி, வெல்டிங் பணி நடந்து வருகிறது. பணி முடிய இரவு 12 மணியாகுமென எதிர்பார்க்கிறோம். ஒவ்வொரு மோட்டாராக இயக்கி தண்ணீர் தருவிக்கப்படும். நாளை (இன்று) வீடுகளுக்கு சப்ளை செய்யப்படும்,'' என்றார்.

