/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.எப்., சந்தாதாரர்களுக்கு புதிய 'ஆன்லைன்' சேவை அறிமுகம்
/
பி.எப்., சந்தாதாரர்களுக்கு புதிய 'ஆன்லைன்' சேவை அறிமுகம்
பி.எப்., சந்தாதாரர்களுக்கு புதிய 'ஆன்லைன்' சேவை அறிமுகம்
பி.எப்., சந்தாதாரர்களுக்கு புதிய 'ஆன்லைன்' சேவை அறிமுகம்
ADDED : டிச 12, 2024 05:57 AM
கோவை; ஆதார் அடிப்படையிலான ஓ.டி.பி., (OTP)) மூலம் யூ.ஏ.என்., (UAN)- ஐ செயல்படுத்தி, ஊழியர்கள் பி.எப்., கணக்கை பராமரிக்கும் ஆன்லைன் சேவையை, பி.எப்., அலுவலகம் அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து, மண்டல பி.எப்., கமிஷனர் வைபவ் சிங் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு, 2024---25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், 'வேலை வாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை' என்னும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக, அதிக எண்ணிக்கையிலான தொழிலதிபர்கள் மற்றும் ஊழியர்கள் பயனடைவதை உறுதி செய்ய, சமீபத்தில் வேலையில் சேர்ந்தவர்கள் முதல், தற்போதைய நிதியாண்டில் சேரும் அனைத்து ஊழியர்களுக்கும், ஆதார் அடிப்படையிலான ஓ.டி.பி., (OTP)) மூலம் யூ.ஏ.என்., (UAN)- ஐ செயல்படுத்தும் முறையை, வரும் 15ம் தேதிக்குள் தொழிலதிபர்கள் செய்து முடிக்க வேண்டும்.
இதற்காக பி.எப்., அலுவலகம் சார்பில் விரிவான ஆன்லைன் சேவை வழங்கப்படுகிறது. இந்த சேவை மூலம் பி.எப்., நிதி கணக்குகளை நிர்வகிக்கவும், வருங்கால வைப்பு நிதி பாஸ்புக்குகளைப் பார்க்கவும், பதிவிறக்கம் செய்யவும், வருங்கால வைப்பு நிதியிலிருந்து முழுமையாக பணத்தை திரும்பப் பெறவும் முடியும்.
முன்பணம் பெறவும் அல்லது ஒரு வைப்பு நிதி கணக்கிலிருந்து மற்றொரு வைப்பு நிதி கணக்கிற்கு பணத்தை மாற்றவும், ஆன்லைனில் விண்ணப்ப படிவங்களைச் சமர்ப்பிக்க முடியும். தனிப்பட்ட விவரங்களைப் புதுப்பிக்கவும், விண்ணப்ப படிவங்களின் நிலைமையைக் கண்காணிக்கவும் இந்த சேவை உதவுகிறது. வீட்டில் இருந்தே இந்த சேவையை பெறலாம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

