/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளலூர் கிடங்கில் புதிய திட்டங்கள் கூடாது; மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் மனு
/
வெள்ளலூர் கிடங்கில் புதிய திட்டங்கள் கூடாது; மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் மனு
வெள்ளலூர் கிடங்கில் புதிய திட்டங்கள் கூடாது; மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் மனு
வெள்ளலூர் கிடங்கில் புதிய திட்டங்கள் கூடாது; மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் மனு
ADDED : மார் 19, 2024 12:20 AM
கோவை;வெள்ளலுார் குப்பை கிடங்கில், எந்தவொரு திட்டத்துக்கும் அனுமதி வழங்கக்கூடாது என்று, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் முறையிடப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் தினமும், 1,250 டன் வரையிலான குப்பை சேகரமாகிறது.
இக்குப்பை, 20 ஆண்டுகளுக்கும் மேலாக குவிக்கப்பட்டதால் துர்நாற்றம், ஈ தொல்லை, நிலத்தடி நீர் மட்டம் மாசு போன்ற பாதிப்புகளை, அப்பகுதி மக்கள் சந்திக்கின்றனர்.
தேசிய பசுமை தீர்ப்பாயத்திலும், இதுதொடர்பான வழக்கு நடந்துவருகிறது.
இந்நிலையில், வெள்ளலுார் கிடங்கும் துவங்கப்படும், புதிய திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இதற்கு அனுமதி தரக்கூடாது என, முறையிட்டுள்ளனர்.
குறிச்சி - வெள்ளலுார் மாசு தடுப்புக் கூட்டுக்குழு செயலாளர் மோகன், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளரிடம் அளித்துள்ள மனு:
கோவை மாநகராட்சி நிர்வாகம், வெள்ளலுார் குப்பை கிடங்கு வளாகத்தில் உயிரி எரிவாயு கலன்(பயோ காஸ் பிளான்ட்) அமைப்பதற்கான பரிசீலனையில் உள்ளதும், விரைவில் பணிகளை துவங்கவுள்ளதும் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே, குப்பையை கொட்ட மாற்று இடம் தேர்வு செய்ய வேண்டும், பழைய குப்பையை 'பயோ மைனிங்' முறையில் அழித்து நிலத்தை மீட்க வேண்டும் என பசுமை தீர்ப்பாணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் தங்களது வாரியம், 2019 மார்ச் 31ம் தேதிக்கு பிறகு, வெள்ளலுார் குப்பை கிடங்கில், திடக்கழிவு மேலாண்மை சட்டம், 2016ன் படி குப்பை கிடங்கில் திடக்கழிவு மேலாண்மை செய்ய அனுமதி வழங்கவில்லை.
எனவே, பசுமை தீர்ப்பாயம் வழக்கு முடிவுக்கு வரும் வரை, எந்தவொரு புதிய திட்டத்துக்கும் அனுமதி வழங்கக்கூடாது.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

